Breaking
Fri. Jun 20th, 2025

அரசியலமைப்புக்கான 19 ஆவது திருத்தம் நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதனை நேற்று சமர்ப்பித்திருந்த நிலையில் முக்கிய கட்சிகள் இது தொடர்பில் வாதப்பிரதிவாதங்களையும், கருத்துக்களையும் முன்வைத்து வந்தன.

இந்த நிலையில் இலங்கையில் முக்கிய கட்சிகளில் ஒன்றன ஜே.வி.பி தனது கருத்தை இன்று ஊடகவியலாளர் மாநாட்டில் வெளியிட்டுள்ளது.

அதன்படி அரசியலமைப்புக்கான 19 ஆவது திருத்ததிற்கு தம் கட்சி ஆதரவு வழங்குவதாக ஜே.வி.பி இன்று தம் முடிவை வெளியிட்டுள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனை தெரிவித்த செயலாளர் ரில்வின்சில்வா அவர்கள் எதிர்வரும் பொதுத்தேர்தலில் கூட்டணி இன்றி தம் கட்சி தனித்துப் போட்டியிடும் எனவும் மேலும் தெரிவித்தார்.

Related Post