Breaking
Mon. Dec 8th, 2025

இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள பொருளாதார சீர்திருத்தங்கள் இந்திய முதலீட்டாளர்களுக்கு ஆக்கபூர்வமான முதலீட்டு சூழலை ஏற்படுத்தியுள்ளது!

இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள பொருளாதார சீர்திருத்தங்கள் இந்திய முதலீட்டாளர்களை ஆர்வப்;படுத்தியுள்ளதுடன் இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனமாக திகழும்எல்.என்.ஜி எரிவாயு நிறுவனம், இலங்கை சந்தையில் முற்றிலும் மாறுபட்ட புதிய பசுமைஎரிவாயுவினை விநியோகிப்பதற்கு முன்வந்துள்ளது என இந்திய தொழில்துறையின் கூட்டமைப்பின் வர்த்தக பிரதிநிதிக் குழுத் தலைவர் ரமேஷ் குமார் முத்தா தெரிவித்தார்.   கடந்த வாரம் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சில் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுடனானஇடம்பெற்ற விசேட சந்திப்பின் போதே ரமேஷ் குமார் முத்தா இதனை தெரிவித்தார். இவ்விசேட சந்திப்பின் போது ரமேஷ் குமார் முத்தா தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்:   இலங்கை மற்றும் இந்திய பொருளாதாரங்களில் சீர்திருத்தங்கள் நடைபெற்று வருகின்றன. இருநாட்டுபொருளாதாரங்களும் வளர்ச்சிப் பாதையில் உள்ளன. இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ளபொருளாதார சீர்திருத்தங்கள் இந்திய  முதலீட்டாளர்களை ஆர்வப்படுத்தியுள்ளதுடன் ஆக்கபூர்வமானமுதலீட்டு  சூழலை ஏற்படுத்தியுள்ளது. எமது பிரதிநிதிகளின் சிறப்பு உறுப்பினர்கள் இலங்கையில் எரிசக்தி, எல்.என்.ஜி எரிவாயு, ஏற்றுமதி இணைப்புகள் மற்றும் நீர் வழங்கல் ஆகியவற்றில்பங்கெடுத்துக் கொள்ள ஆர்வமாக உள்ளனர். இந்தத் துறைகளில் இலங்கையில் முதலீடு செய்வதற்கும்நாம் திட்டமிட்டுள்ளோம். உதாரணமாக, இந்தியாவின் மிகப்பெரிய இறக்குமதியாளரான பெட்ரோனாட்எல்.என்.ஜி எரிவாயு லிமிடெட் இலங்கையில் ஒரு பெரிய அளவிலான திட்டத்திற்கு அழைப்புவிடுத்துள்ளது.   இந்திய பன்னாட்டு நிறுவனங்கள், கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் நடுத்தர சிறியகைத்தொழில்துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் இருந்து 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டஉறுப்பினர்களைக் கொண்டுள்ள இந்திய தொழில்துறை கூட்டமைப்பானது வர்த்தகம் தலைமையிலான,இலாப நோக்கமற்ற கூட்டமைப்பாகும். இது ஒரு முன்னணி கொள்கை செல்வாக்குக்கு உள்ளாகியுள்ளசெயல்மிகு பயனர். முக்கியமாக இந்திய தொழில்துறை கூட்டமைப்பானது இந்திய நடுத்தர சிறியகைத்தொழில்துறை, பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் தொழில்துறை ஆகியவற்றிற்கு ஒரு குறிப்புபுள்ளியாக திகழுகிறது. இவை 2 லட்சம் உறுப்பு நிறுவனங்களை கொண்டுள்ளது. இந்தியதொழில்துறை கூட்டமைப்பானது சீனா, அவுஸ்திரேலியா, பஹ்ரைன், எகிப்து, பிரான்ஸ், ஜெர்மனி,சிங்கப்பூர், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய ஒன்பது நாடுகளில் வெளிநாட்டு அலுவலகங்கள்கொண்டுள்ளதுடன் 106 நாடுகளில் 320 நிறுவனங்களுடன் நிறுவன கூட்டுறவை கொண்டுள்ளது.அத்துடன் இந்திய தொழில்துறை கூட்டமைப்பு இந்தியாவின் மிகப் பெரிய தொழில்துறைசம்மேளனமாகவும் திகழுகின்றது என்றார் இந்திய தொழில்துறையின் கூட்டமைப்பின்  வர்த்தகபிரதிநிதிக் குழுத் தலைவர் ரமேஷ் குமார் முத்தா.   மேற்படி இச்சந்திப்பில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கருத்து தெரிவிக்கையில்: எங்கள்தொழில்துறைக்குள் இந்திய முதலீட்டாளர்களை நாம் வரவேற்கின்றோம்.   பெட்ரோனாட் எல்.என்.ஜிநிறுவனம் ஏற்கனவே இலங்கை சந்தையில்  முதலீடுகளை மேற்கொள்வதற்கான திட்டத்தைமுன்வைத்துள்ளமைக்கு  எனது பாராட்டுக்கள் உங்கள் முயற்சிகள் உள்ளூர் எரிவாயு சந்தையைவலுப்படுத்த முடியும். நமது கூட்டு அரசாங்கத்தின் பொருளாதார அபிவிருத்தி நோக்கமானது, உயர்நடுத்தர வருமான மட்டத்தை எட்டுவதற்கும், பொருளாதார சீர்திருத்தங்களுக்கு முக்கிய பங்கைவகிப்பதற்குமாக செயலாற்துகின்றது.    இலங்கைக்கான இந்தியாவின் முதலீடு ஆண்டுதோறும் 50-70 மில்லியன் அமெரிக்க டொலருக்குஇடைப்பட்டதாக காணப்படுகின்றது.  இந்திய முதலீட்டாளர்கள் இங்கு குறிப்பிடத்தக்க பங்கைக்கொண்டுள்ளனர். உதாரணமாக 2015 ஆம் ஆண்டு இந்தியா, இலங்கையின் ...

Read More

புலிகள் செய்த பாரிய தவறுக்கு பிராயச்சித்தமாக தமிழ்க்கூட்டமைப்பு ஒத்துழைக்க வேண்டும் பாராளுமன்றத்தில் அமைச்சர் ரிஷாட் கோரிக்கை

ஊடகப்பிரிவு   வடக்கு முஸ்லிம்களுக்கு விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட பாரிய தவறுக்கு பிராயச்சித்தமாக, தமிழ்க்கூட்டமைப்பினர் அந்த மக்களின் மீள்குடியேற்றத்திற்கான ஒத்துழைப்பையும், ஆதரவையும் தரவேண்டும். இல்லையென்றால், 'முடியாது'…

Read More

எங்கள் பொறுமையை சோதிக்க வேண்டாம், நாம் இனியும் பொறுக்கத்தயாரில்லை. பாராளுமன்றில் வெகுண்டெழுந்தார் அமைச்சர் ரிஷாட்

ஊடகப்பிரிவு முஸ்லிம்களின் பொறுமையை இனியும் சோதிக்காதீர்கள், முஸ்லிம் இளைஞர்களை ஆயுதம் தூக்க வைத்து இன்னுமோர் இரத்த ஆறு ஓடுவதற்கு வழி செய்யாதீர்கள். நாங்கள் இவ்வளவு…

Read More

அ.இ.ம.கா.மாகாண சபை உறுப்பினர் மொஹம்மட் பாயிஸ் கட்சியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மாகாண சபை உறுப்பினர் மொஹம்மட் பாயிஸ் கட்சியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனக்கடிதத்தை அமைச்சர் ரிஷாட்…

Read More

நாசகார சக்திகளை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்துங்கள் சாகலவிடம் அமைச்சர் றிஷாட் வலியுறுத்து

ஊடகப்பிரிவு நுகேகொட கடை எரிப்புச் சம்பவத்தில் ஈடுபட்ட நாசகாரிகளை  உடன்கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் பாதிக்கப்பட்ட வர்த்தகருக்கு நஷ்டயீடு வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் சட்டமும்…

Read More

இறப்பர் பாஸ்மதி வெறும் நாடகமே சதொச தலைவர் அறிவிப்பு

ஊடகப்பிரிவு லங்கா சதொசவில் இறப்பர் அரிசி விற்கப்படுவதாக கூறப்பட்டுவரும் கதையை ஏற்க முடியாது என    சதொச தலைவர் டி.எம்.பி.தென்னகோன். இன்று 2017.06.05 வொக்ஷல் வீதி…

Read More

சதொச நிறுவனத்தின் வளர்ச்சியை மழுங்கடிக்க முயற்சி வதந்திகளை நம்ப வேண்டாம்.

ஊடகப்பிரிவு சதொச நிறுவனத்தில் பிலாஸ்டிக் அரிசி விற்கப்படுவதாக வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. சதொச நிறுவனத்தினூடாக பாவனைக்குப் பொருத்தமில்லாத இறப்பர் பாஸ்மதிஅரிசி விற்கப்பட்டு வருவதாக சில…

Read More

இரத்தினபுரியில் பாதிக்கப்பட்ட மத ஸ்தலங்களுக்கு அமைச்சர் ரிஷாட் நேரில் விஜயம் புனரமைப்புக்கு நிதி உதவியும், அகதிகளுக்கு நிவாரணமும் கையளிப்பு

-ஊடகப்பிரிவு இரத்தினபுரி தொகுதிக்கு உட்பட்ட பாதிக்கப்பட்ட விகாரைகள், பள்ளிவாசல்கள், இந்து கோவில்களின் புணரமைப்புக்கென அமைச்சர் ரிஷாட் பதியுதீன் நிதி உதவி வழங்குவதாக அறிவித்தார். இந்தப்…

Read More

துயர் துடைக்கும் பணியைத் துரிதப்படுத்த அமைச்சர் றிஷாட் அதிரடி நடவடிக்கை

இரத்தினபுரி கூட்டத்தில் முக்கிமான தீர்மானங்கள். சுஐப் எம் காசிம் வெள்ளத்தினாலும் மண்சரிவினாலும் மிக மோசமாக அழிவுக்குட்பட்ட இரத்தினபுரி தேர்தல் தொகுதியின் அனைத்துப் பிரதேசங்களையும் துரிதமாக…

Read More

இரத்தினபுரி ஜூம்ஆபள்ளியில் பாதிக்கப்பட்டவர்களுடன் தமிழ் முஸ்லிம் தலைவர்கள் சந்திப்பு

ஊடகப்பிரிவு இரத்தினபுரி வெள்ளத்தாலும் மண்சரிவாலும் பாதிக்கப்பட்ட மக்களை இரத்தினபுரி தொகுதி அனர்த்த நிவாரணத்துக்கான அமைப்பாளரும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும்,  அமைச்சருமான  றிஷாட்…

Read More

கவிக்கோவின் இழப்பு தமிழ் கூறும் உலகுக்கு பாரிய இடைவெளி அமைச்சர் ரிஷாட் அனுதாபம்

ஊடகப்பிரிவு உலகப் பெருங் கவிஞரும், தமிழ் பேராசிரியருமான கவிக்கோ அப்துல் ரஹமானின் மறைவு தமிழ் கூறும் நல்லுலகுக்கு பாரிய இழப்பாகும் என்று அகில இலங்கை…

Read More

இரத்தினபுரி மாவட்ட அனர்த்த ஒருங்கிணைப்புக்கு பொறுப்பாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் நியமனம்

அனர்த்தத்திற்கு உட்படாத பிரதேசங்களை சேர்ந்த அமைச்சர்களை அனர்த்தத்திற்குள்ளான தொகுதிகளின் ஒருங்கிணைப்பு செயற்பாடுகளுக்காக அமைப்பாளராக நியமிக்க ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளதுடன்,…

Read More