Breaking
Fri. Jun 20th, 2025

அப்துல்லாஹ்

தமக்குக் கிடைத்த புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் ஒரு தொகை சட்டவிரோத சிகரெட்டுக்களை தாம் கைப்பற்றியதாக அம்பாறை மாவட்டத்தின் கல்முனைப் பிரிவு பொலிஸ் புலனாய்வு அதிகாரி சுபைர் அப்துல் ஜவாத் தெரிவித்தார்.

புதன்கிழமை இரவு கல்முனை கடற்கரைப் பள்ளி வீதியிலுள்ள வீடொன்றைச் சோதனையிட்டபோது 110400 சட்டவிரோத சிகரெட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவற்றின் இலங்கைப் பெறுமதி சுமார் 22 இலட்சத்து 8 ஆயிரம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட கல்முனை கடற்கரைப்பள்ளி வீதியிலுள்ள வீட்டுரிமையாளர் ஆதம்பாவா சேகு சிக்கந்தர் ஹஸன் (வயது 53) என்ற நபர் விசாரிக்கப்பட்டு வருகின்றனார்.

இவர் நீண்டகாலமாக குறித்த வீட்டை சட்டவிரோத கொள்வனவுப் பொருட்களைக் களஞ்சியப்படுத்தும் இடமாகப் பாவித்து வந்துள்ளார் என்பது தெரியவந்திருப்பதாக பொலிஸார் கூறினர்.

Related Post