2500 ஆண்டு பழமையான மனித மூளை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.இங்கிலாந்தில் கடந்த 2008–ம் ஆண்டில் போர்க் பகுதியில் சேறும் சகதியும் நிறைந்த பகுதியில் தலை வெட்டப்பட்ட நிலையில் ஒரு மண்டை ஓடு கண்டெடுக்கப்பட்டது. அதில் மூளை பத்திரமாக இருந்தது.
இந்த மூளையை 34 பேர் கொண்ட நிபுணர் குழு ஆய்வு மேற்க்கொண்டு வருகிறது. அந்த மண்டை ஒடு தாடையுடனும், முதுகெலும்பு ஒட்டிய நிலையிலும் உள்ளது.
சமீபத்தில் கிடைத்த தகவல்படி அந்த மண்டை ஓட்டுக்குள் இருக்கும் மூளை 2500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவருக்கு சொந்தமானதாக இருக்கலாம் என கருதப்படுகிறது. இதுகுறித்து நிபுணர்கள் தொடர்ந்து ஆய்வு மேற்க்கொண்டு வருகின்றனர்