ஒரு கிலோ அரிசியில் சுமார் ஆறு பேருக்கு உணவு வழங்கும் வேலைத்திட்டத்தின் முதல் கட்டம் நேற்று ஆரம்பமானது.
வத்தளை, ஹுனுப்பிட்டிய விகாரையில் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கபட்ட அந்நிகழ்வில் முதல் நாள் விகரதிபதியின் வேண்டுகோளின் படி சுமார் ஆயிரம் பேருக்கு நேற்று பகல் இலவசமாக சோற்றுப் பார்சல்கள் வழங்கபட்டன.
இன்று முதல் கொழும்பில் இன்னும் சில இடங்களிலும் ஆரம்பமவுள்ள இத்திட்டம் நேற்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.