Breaking
Wed. Jun 18th, 2025

ஊடகப் பிரிவு

இலங்கை அரசியலில் புதிய மாற்றத்திற்கான பாதையினை குருநாகல் மாவட்டத்தில் இருந்து எமது கட்சி ஆரம்பிக்கவுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.

குருநாகல் சீசன் ஹோட்டலில் விழிப்போம்,சிந்திப்போம்,ஒன்றுபடுவோம் என்னும் தொனிப் பொருளில் இடம் பெற்ற அரசியல் கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

குருநாகல் மாவட்ட அமைச்சரின் ஒருங்கிணைப்பாளரும்,தொழிலதிபருமான அஸார்தீன் மொயினுதீன் தலைமையில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் மேலும் அமைச்சர் பேசுகையில் கூறியதாவது –

வடமேல் மாகாணத்திற்கு வந்து நாங்கள் அரசியல் செய்ய வேண்டிய தேவைப்பாடு இல்லை.குருநாகல் மாவட்டத்தில் 12 இலட்சம் வாக்குகள் இருக்கின்றன.இதில் 15 பாராளுமன்றப் பிரதி நிதித்துவம் பெறப்பட்டுவருகின்றன.ஆனால் துரதிஷ்டம் நாம் எமது சிறுபான்மை சமூகங்களின் உரிமைகளை பெற்றுக் கொள்ள சிரமங்களுக்குள்ளாவதாகவும் அமைச்சர் கூறினார்.

இழந்த பாராளுமன்ற பிரதி நிதித்துவத்தை நாம் பெறுகின்ற இந்த போராட்டம் இலகுவானது அல்ல.எமது தியாகங்களும்,ஒற்றுமையுமே இந்த பயணத்திற்கு மூலதானமாகும் என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறினார்.
பிரதி அமைச்சர் அமீர் அலி,குருநாகல் தள வைத்தியசாலை வைத்தியர் ஷாபி உட்பட பலரும் உரையாற்றினார்.

இங்கு உரையாற்றிய குருநாகல் மாவட்ட அமைச்சரின் ஒருங்கிணைப்பாளரும்,தொழிலதிபருமான அஸார்தீன் மொயினுதீன் தமதுரையில்-
இலங்கையின் இன்றைய அரசியலில் பேசப்படுவர் அமைச்சர் றிசாத் பதியுதீன்.அன்று மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் இந்த சமூகத்தின் விடிவுக்கும்.விமோசனத்திற்குமாக ஆற்றிய பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுவிட்தோ என்று எண்ணினோம்.ஆனால் அல்லாஹ்வின் துணைியனால் அந்தப் பணியினை அமைச்சர் றிசாத் பதியுதீன் முன்னெடுக்கின்றார்.

இது எமது மாவட்ட மக்களின் ஒற்றுமைக்கு கிடைத்துள்ள நல்லதொரு சந்தரப்பமாகும்.எனவே சிறு சிறு சுயநல போக்குகளுக்காக சமூகத்தினை சிதறடிக்காமல் ஒரே குடையின் கீழ் ஒன்றுபட்டு எமது பிரதி நிதித்துவத்தை நாம் அடைவோம் என்றும் அசருதீன் கூறினார்.

rishad1.jpg2_.jpg3_.jpg66 rishad1.jpg2_.jpg3_ rishad1.jpg2_ rishad1

Related Post