முனவ்வர் காதர்
1990ஆம் ஆண்டு வடக்கிலிருந்து விடுதலைப்புலிகளால் இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் ஐனாதிபதி மைத்திரிபால சிரிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரிடம் மிக விரைவில் பேச்சுவாத்தை மேற்கொள்ளப்படும்.
கடந்த 30 வருடங்களாக பல இன்னல்களுடன் நாட்டின் பல பாகங்களிலும் வாழும் வடபுல முஸ்லிம்களின் மீழ்குடியேற்றம்,மற்றும் அத்தியவசியதேவைகள் தெடர்பிலும் இதுவரைகாலமும் விடுவிக்கப்படாத மக்களின் விவசாய, குடிமனை கானி போன்ற முக்கிய விடயங்களை ஐனாதிபதிக்கு தெளிவு படுத்தவுள்ளதாக அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்துத்தெரிவித்த அமைச்சர் வட புலமக்கள் மீள்குடியேர தயாராக இருப்பதாகவும் அவர்களுடைய அடிப்படை பிரச்சினைகள் தீர்க்கப்படாமையினால் தாமதமடைந்துள்ளதனால் மிகவிரைவில் ஐனாதிபதி, பிரதமர் மற்றும் இரானுவத்துடன் விரைவில் பேசி மிக விரைவில் சிறந்ததீர்வினை பெற்றுத்தருவதாக உறுதியழித்துள்ளார்.