எட்டுவயது சிறுமியைப்பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக சொல்லப்படும் 25 வயது இளைஞன் ஒருவனைக்கைது செய்துள்ளதாக வண்ணாத்திவில்லு பொலிஸார் தெரிவித்தனர். வண்ணாத்திவில்லு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கரைதீவு பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவராவார்
வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சிறுமி யின் தாயின் சகோதரி ஒருவருடைய கணவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவராவார். தான் தரும் பணத்தை தாயிடம் கொடுக்குமாறு கூறி சிறுமியை ஏமாற்றி சந்தேக நபர் சிறுமியை தனது வீட்டுக்கு அழைத்து சென்றே இவ்வாறு குற்றம் புரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தமது மகளுக்கு ஏற்பட்ட இந்த கொடுமையினை அறிந்து கொண்டுள்ள சிறுமியின் தாய் இது தொடர்பில் வண்ணாத்திவில்லு பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்தே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சிறுமி வைத்திய பரிசோதனைக்காக புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, சந்தேக நபரை புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வண்ணாத்திவில்லு பொலிஸார் இதற்கான நட வடிக்கைகளை மேற்கொண்டு வரு கின்றனர்.