ஐந்து கிலோகிராம் ஹெரோய்னுடன் பிரபல போதைப்பொருள் விநியோகஸ்தர் ஒருவரை நீர்கொழும்பு பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
இந்த போதைப் பொருள் விநியோகம் தொடர்பில் சந்தேகநபரின் மகனும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு சில தினங்களாக மேற்கொண்ட சுற்றிவளைப்பின் பிரதிபலனாக நேற்று (10) இந்த போதைப்பொருள் விநியோகஸ்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சந்தேகநபர் நீர்கொழும்பு பகுதியில் தங்க நகை விற்பனை நிலையமொன்றிற்குள் இருந்து விநியோக நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது கைது செய்யப்பட்டுள்ளார்.
1990 ஆம் ஆண்டுகளில் இருந்து சந்தேகநபர் போதைப் பொருள் விநியோகத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சந்தேகநபரிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஹெரோய்ன் போதைப்பொருளின் பெறுமதி 400 இலட்சம் ரூபாவாகும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
போதைப்பொருள் விநியோகம் தொடர்பில் பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பதில் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
இந்த நடவடிக்கையுடன் தொடர்புடைய வேறு நபர்கள் குறித்தும் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்mn