Breaking
Tue. Dec 9th, 2025

இலங்கைப் படையினரை ஐ.நா அமைதி காக்கும் படையில் இணைக்கப்பட்டுள்ளமைதொடர்பில் இன்னர் சிட்டிபிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

கடந்த 2009ம் ஆண்டு யுத்தம்  தொடர்பில் இலங்கை இராணுவத்தினருக்கு எதிராக போர்க்குற்ற விசாரணைகள் இடம்பெற்று வருகிறன.

எனினும், ஐ.நாவின் அமைதிகாக்கும் படையில் இலங்கை இராணுவத்தினர் இணைக்கப்பட்டுள்ளதுடன், மத்திய கிழக்கு ஆபிரிக்காவில் அவசர ஹெலிக்கொப்டர் சேவையை நடத்தும் முக்கிய பொறுப்பும் படையினரிடம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அவர்களை ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படையில் எவ்வாறு இணைத்துக் கொள்ள முடியும் என்று கேள்வி எழுப்பப்பட்டது.

எனினும், மத்திய ஆபிரிக்க நாடுகளில் உள்ள அமைதி காக்கும் படையின் தலைவர் ஹார்வ் லட்சோ இதற்கு பதில் வழங்க மறுத்துவிட்டார் என தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 9ம் திகதி இலங்கை விமானப் படைக்கு சொந்தமான ஹெலிக்கொப்டருடன் 120பேர் கொண்ட குழு, ஐ.நா. அமைதிகாக்கும் படையுடன் இணைந்து கடமையாற்றுவதற்காக மத்திய ஆபிரிக்க குடியரசிற்கு புறப்பட்டுச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

Related Post