இதன் போது இலங்கை முஸ்லிம்கள் ஆட்சி மாற்றத்தின் பின் சந்தோசமாக இருப்பதாக தான்
அறிந்துள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி அந்த சந்தோசம் நீடிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள்
மற்றும் சர்வதேச உறவுகளின் அவசியம் குறித்தும் விளக்கியதோடு ஜனாதிபதி பிரதிநிதிகள்
குழுவில் அவரோடு பயணித்து குறித்த சந்திப்பின் விசேட அதிதியாக இணைந்து கொண்ட மத்திய
மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலியின் நட்பு பற்றியும் அவரிடம் அறிவுரை பெறுவது பற்றி
நகைச்சுவையாகவும் அளவளாவியிருந்தார்.
சர்வதேச உறவுகளை மீளக் கட்டியெழுப்புவதில் குறிப்பாக ஐக்கிய இராச்சியத்துடனான உறவுகளை
வளர்த்துக்கொள்வதிலும் புலம் பெயர்ந்து வாழ்வோரை சந்திக்கக் கிடைத்ததிலும் தனது
மகிழ்ச்சியையும் வெளியிட்ட ஜனாதிபதி, கடந்த காலத்தில் முஸ்லிம் சமூகம் தம்மால்
நிராகரிக்கப்பட்டுள்ள பொது பல சேனா போன்ற அமைப்புகளால் துன்பங்களுக்குள்ளானது குறித்தும்
தமது பார்வைகளை முன்வைத்துள்ளதோடு தனது வெற்றிக்காக உழைத்த முஸ்லிம் சமூகத்துக்கு தனது
நன்றியையும் குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் மக்கள் ஆர்வம் மற்றும் பங்களிப்பு குறித்தும்
சுட்டிக்காட்டியிருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
ஜனாதிபதி ஊடக பிரிவு மற்றும் அரச செய்தி நிறுவன பிரதிநிதிகளும் குறித்த நிகழ்வை
ஒலி,ஒளிப் பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது