Headlines

கிளிநொச்சி வெள்ளநிவாரணப் பொருட்கள் தொடர்பான சர்ச்சை –  சதொச நிறுவனத் தலைவர் விளக்கம்

கிளிநொச்சியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அகதிகளுக்கு, கொழும்பிலிருந்து 10 லொறிகளில் சசொசவினால் கொண்டு செல்லப்பட்ட நிவாரணப் பொருட்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு விநியோகிக்கப்படவில்லை என்று எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து சதொச நிறுவனத்தின் தலைவர் தாரீக் கலீல் விளக்கமளித்துள்ளார். ஜனாதிபதி  மற்றும் பிரதமர் ஆகியோர் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிசாத் பதியுதீனிடம் விடுத்த கோரிக்கைக்கிணங்கவே அமைச்சரின் பணிப்புரைக்கமைய சதொச நிறுவனம் இந்த பொருட்களை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர அவசரமாக அனுப்பி வைத்தது. கிளிநொச்சி அரச அதிபர் இந்த பொருட்களை கொள்வனவு…

Read More

பாராளுமன்ற கலைப்பை எதிர்த்து மக்கள் காங்கிரஸ் வழக்கு தாக்கல் செய்தது!

அரசியலமைப்பை மீறி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பாராளுமன்றத்தை கலைத்தமைக்கு எதிராக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இன்று (12) உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் வழக்குத் தாக்கல் செய்துள்ளது. சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீபினால் தாக்கல் செய்யப்பட் இந்த மனு மீதான விசாரணை, இன்றே எடுத்துக்கொள்ளப்படுகின்றது. இந்த வழக்கில் சிரேஷ்ட சட்டத்தரணி சுரேன் பெர்னாண்டோ மக்கள் காங்கிரஸ் சார்பில் ஆஜராகியுள்ளார்.   -ஊடகப்பிரிவு-

Read More

நற்பிட்டிமுனை ஜும்மா பள்ளிவாசலுக்கான இலத்திரனியல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!

அம்பாறைக்கு விஜயம் செய்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன், நற்பிட்டிமுனை ஜும்மா பள்ளிவாசலுக்கான இலத்திரனியல் உபகரணங்களை அன்பளிப்பாக வழங்கி வைத்தார். இந்த நிகழ்வில், கட்சியின் தவிசாளரும், பிரதி அமைச்சருமான அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப், கட்சியின் செயலாளர் எஸ்.சுபைர்தீன், நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் தாஹிர், கல்முனை மாநகர சபை உறுப்பினர் முபீத், முன்னாள் தவிசாளரும், நுகர்வோர் அதிகார சபையின் நிறைவேற்றுப் பணிப்பாளருமான சட்டத்தரணி எம்.ஏ.அன்சில், கிழக்கு மாகாண…

Read More

தெற்காசிய பிராந்தியத்தின் மதிப்பீட்டு சங்கிலிகளுடன் இலங்கையை ஒன்றிணைக்க பரிந்துரைக்கிறோம்! – ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர்

ஊடகப்பிரிவு – ‘அரசாங்கத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான தொலைநோக்கில் விவரித்துள்ளபடி ஏற்றுமதி தலைமையிலான தொழிற்துறைக்கு தொழில்மயமாக்கலுக்கான பொருத்தமான கொள்கைகளை மேம்படுத்துவதில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு தனது செயற்பாடுகளை முன்னெடுத்து செல்கின்றது‘ என  கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர்; ரிஷாட் பதியுதீன்    தெரிவித்தார். கடந்த 9ஆம் திகதி கொழும்பு 3 இல் அமைந்துள்ள அமைச்சின் அலுவலகத்தில்  இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின்  தூதுவர்  துங்–லாய் மார்கு க்கும் அமைச்சருக்குமிடையே இடம்பெற்ற சந்திப்பொன்றின் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார். இச்சந்திப்பில்…

Read More

நிந்தவூரில், வீட்டுத்திட்டம் ஆரம்பித்து வைப்பு

நிந்தவூரில் சுயாதீனமாகச் செயற்பட்டுவரும் குழுவினால் தெரிவுசெய்யப்பட்ட வரிய குடும்பங்களுக்கான 500 மாதிரி வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்திற்கு அமைவாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசியத்தலைவரும், அமைச்சருமான அல்ஹாஜ் ரிசாத் பதியுதீன் அவர்களது சொந்த நிதியிலிருந்து நிர்மாணிக்கப்படவுள்ள முதலாவது வீட்டுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு கடந்த 08.07.2018 அன்று நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம். ஏ.எம் தாஹிர் அவர்களின் தலைமையில் அரசியடி வட்டாரத்தில் இடம் பெற்றது. கடந்த தேர்தல் காலங்களில் வழங்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் அமைந்த…

Read More

நிந்தவூர் அல்- அஷ்ரக் தேசிய பாடசாலையின் குறைகளை கேட்டறிந்தார் அமைச்சர் ரிசாத்

  நிந்தவூர் அல்- அஷ்ரக் தேசிய பாடசாலையின் பழைய மாணவர்களின் அழைப்பிற்கிணங்க, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் பாடசாலைக்கு கடந்த 08.07.2018 அன்று விஜயம் செய்தார். இதன்போது பாடசாலையின் முகப்பு, நுழைவாயில் மற்றும் மூன்றுமாடிக் கட்டிடங்கள் நிர்மானிப்பது தொடர்பாகவும் பாடசாலை மாணவர்களின் கல்வி அபிவிருத்தி உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாகவும் பாடசாலையின் அதிபர் எஸ்.எம். ஜாபீர் மற்றும் பழைய மாணவர்களோடு விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் மேலதிக நடவடிக்கைகளுக்கான ஆவணங்களை நிந்தவூர் பிரதேச சபையின்…

Read More

காப்பெட் பாதையாக மாற்றமடையும் குவைத் வைத்திசாலை வீதி: அ.இ.ம.கா.வின் அபிவிருத்திப் பணி

குவைத் வைத்திசாலை வீதி (Kuwait Hospital Road) காப்பெட் பாதையாக புனர்நிர்மானம்  செய்யும் பணிகள் நேற்று (2017-02-27)  நடைபெற்றது. இந்நிகழ்வில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவருமான கெளரவ அல்ஹாஜ் எம்.எச்.எம். நவவி அவர்களும், அலி சப்ரி ரஹீம் அவர்களும் கலந்துகொண்டனர்.

Read More

பா.உ. இஸ்ஹாக் ரஹுமானின் கலாவெவ அலுவலகத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அநுராதபுர மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இஸ்ஹாக் ரஹுமான் கலாவெவ அலுவலகத்தில் அண்மையில் மக்கள் சந்திப்பில் ஈடுபட்டார்.

Read More

கல்பிட்டி கல்வி வளர்ச்சி சம்பந்தமாக இடம்பெற்ற கலந்துரையாடல்

கல்பிட்டி மக்களின் கல்வியில் அக்கறை கொண்ட “கல்பிட்டி கல்வி வட்டம்” என்ற அமைப்பினர் நேற்று 2017.02.19 கல்பிட்டியில் வைத்து புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவருமான கெளரவ அல்ஹாஜ் எம்.எச்.எம். நவவி அவர்களை சந்தித்தனர். இச்சந்திப்பில், கல்பிட்டி மக்களின் கல்வி மட்டம், கல்பிட்டி பாடசாலைகள் மற்றும் மாணவர்கள் எதிநோக்கும் கல்வி பிரச்சினைகள் தொடர்பாகவும் அவற்றுக்கான தீர்வுகள் தொடர்பாகவும் சில கலந்துரையாடல்கள் நடாத்தப்பட்டன.

Read More

முதலைப்பள்ளி மற்றும் தொண்ணூறு ஏக்கர் பகுதிகளுக்கு விஜயம் செய்த நவவி MP

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவருமான கெளரவ அல்ஹாஜ் எம்.எச்.எம். நவவி அவர்கள் நேற்று முன்தினம் (15)  கல்பிட்டி வீதி, முதலைப்பள்ளி மற்றும் தொண்ணூறு ஏக்கர் பகுதிகளுக்கு விஜயம் செய்து மக்கள் சந்திப்பினை மேற்கொண்டார். இதன்போது முதலைப்பள்ளி “தாருல் உலூம் கஸீஸுல் ஹுதா” மத்ராஸா மாணவர்களுக்கு அவர்களின் உயர் கல்விற்கான வசதிகளை செய்வதற்கு பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் நடவடிக்கை எடுத்தார். அத்தோடு தொண்ணூறு ஏக்கர் பெரிய பள்ளிவாயல் மத்ரஸா பிரச்சினைகளையும்…

Read More

புத்தளம் தள வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்ட நவவி MP

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவருமான கெளரவ அல்ஹாஜ் எம்.எச்.எம். நவவி அவர்கள் அண்மையில் புத்தளம் தள வைத்தியசாலைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். புத்தளம் நகரின் பிரதான வைத்தியசாலையின் பிரச்சினைகள் மற்றும் தேவைகளை கண்டறிவதனை குறிக்கோளாக கொண்டதாக இவ்விஜயம் அமைந்திருந்தது. இவ்வைத்தியசாலையின் பிரதான வைத்திய அதிகாரி டாக்டர் சுமித் ரத்தனாயக்க மற்றும் வைத்தியர்கள் உடனான மிக முக்கிய கலந்துரையாடல் ஒன்றும் இங்கு நடைபெற்றதுடன், வைத்தியசாலை வளாகம், கட்டிட வேலைகள் நடைபெறும்…

Read More

மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வில் விஷேட அதிதியாக கலந்துகொண்ட நவவி MP

புத்தளம் ஜனாதிபதி விஞ்ஞான கல்லூரியின் கா.பொ.த உயர்தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு அண்மையில் புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலை வளாகத்தில் நடைப்பெற்றது. இந்நிகழ்வில் விஷேட அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவருமான கெளரவ அல்ஹாஜ் எம்.எச்.எம். நவவி அவர்கள் கலந்து சிறப்பித்தார்கள். மாகாண சபை உறுப்பினர் என்.ரீ.எம் தாஹிர் மற்றும் நகர சபை உறுப்பினர்கள், பாடசாலை அபிவிருத்தி…

Read More