Headlines

கட்டார் பேரீத்தம்பழம் ஆண்டியாப் புளியங்கள மக்களுக்கு வழங்கி வைப்பு

இலங்கை முஸ்லிம்கள் நோன்ப திறப்பதற்கென கட்டார் அரசாங்கம் பேரீத்தம் பழங்களை அன்பளிப்பு செய்துள்ளது.ஷேஹ் ஜாசிம் பின் ஜபூர் அல் தானி நன்னொடை அமைப்பினால் வழங்கப்பட்ட பேரீத்தம் பழங்கள் வவுனியா மாவட்டத்தில் அமைந்துள்ள ஆண்டியாப் புளியங்குளம் கிராமம மக்களுக்கு ஆண்டியாப் புளியங்குளம் பாடசாலையில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது. கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன்,கட்டார் துாதுவரலாயத்தின் செயலாளர் அன்சாரி,வன்னி மாவட்ட பாராளுமன்ற  உறுப்பினர் ஹூனைஸ் பாருக் ஆகியோர் இவற்றை வழங்கி வைத்தனர்

Read More

முஸ்லிம்களும் இந்த நாட்டு மக்கள் என்பதை ஞாபகப்படுத்தினார் –ஹூனைஸ் பாருக் எம்.பி

முல்லைத்தீவு மாவட்டத்தில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு தடையாக உள்ள காரணிகள் குறித்து உரிய கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,சட்டத்தரணியுமான ஹூனைஸ் பாருக் இன்று இடம் பெற்ற மீள்குடியேற்ற அமைச்சின் ஆலோசனைக் குழு கூட்டத்தின் போது மீள்குடியேற்ற அமைச்சர்,பிரதி அமைச்சர்,செயலாளர் ஆகியோரிடம் கேட்டுள்ளார். மீள்குடியேற்ற அமைச்சின் ஆலோசனைக் குழு கூட்டம் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் மீள்குடியேற்ற அமைச்சர் குணரத்ன வீரகோன் தலைமையில் இன்று  இடம் பெற்றது.இதன் போது அமைச்சர் றிசாத் பதியுதீன்,மீள்குடியேற்ற பிரதி அமைச்சர்…

Read More

இந்தியாவின் புத்தகயா மீதான தாக்குதல் கண்டிக்கத்தகது-அமைச்சர் றிசாத் பதியுதீன்

இந்தியாவின் புத்தகாயாவில் உள்ள பௌத்த மதத் தளத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவமானது வேதனை தரும் ஒன்றாகும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளார். உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு மொரீஸியஸ் நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர் றிசாத் பதியுதீன் இன்று பிற்பகல் நாடு திரும்பினார். மதங்கள் மனிதர்களை நேர்வழிப்படுத்தவே தோற்றம் பெற்றன.அகிம்சை,கருணை,விட்டுக் கொடுப்பு,புரிந்துணர்வு,ஒருவருக்கொருவர் பரஸ்பரம் என்பதை எடுத்துயியம்பிவரும் மதங்கள்,ஒரு போதும்,பிரிவினை வாதத்துக்கும்,இன முரண்பாடுகளுக்கும் வித்திடுமாறு கோறவில்லை என்பதை…

Read More

தமி்ழ் தேசிய கூட்டமைப்பை இனவாத கட்சியாக பிரகடனம் செய்ய நேரிடும்..உறுப்பினர் நகுசீன் எச்சரிக்கை

  பாதிக்கப்பட்டமன்னார் மாவட்ட  மக்களுக்கு எதை செய்தாலும்,அதனை இழிவாக நோக்கும் ஒருவராக மன்னார் நகர சபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் குமரேஸ் செயற்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ள மன்னார் நகர சபை ஆளும் கட்சி உறுப்பினர் நகுசீ்ன்,தமிழ் தேசிய கூட்டமைப்பு முஸ்லிம்களுக்கு எதிரான கட்சி என்று பிரகடனப்படுத்த வேண்டியேற்படும் என்றும் தெரிவித்துள்ளார்.  அமைச்சர் அதாவுல்லா அவர்களை மன்னாருக்கு அழைத்து வந்த அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்கள்,மன்னார் மாவட்டத்தில் நவீன முறையில் புனரமைப்பு செய்யப்பட்ட பாதைகளை திறந்து வைக்கும் நிகழ்வினை…

Read More