பிராந்திய நலன்களிலும், பிரதிநிதித்துவம் செய்யும் மக்களின் நோக்குகளிலும் இணைந்து செயற்படுவதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கு மாகாணங்களின் புதிய ஆளுநர்களை வாழ்த்தி அவர் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “வடக்கு, கிழக்கு மாகாணங்களின் புதிய ஆளுநர்களான திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் ஆகியோர் சிறுபான்மை சமூகங்களின் பூர்வீகத்திலுள்ளவர்கள். இதனால், எமது மக்களின் அபிலாஷைகள் பற்றி புதிதாக இவர்களுக்கு எதையும் சொல்ல வேண்டியதும் இல்லை….