நான் செல்கின்றேன் இனி வரமாட்டேன் ; ரயிலில் மோதி பலியான மாணவியரின் அதிர்ச்சி பதிவுகள்
பம்பலப்பிட்டி முதல் தெஹிவளை வரையிலான கரையோர ரயில் பாதை தொடர்பில் புதிதாக விளக்கம் ஒன்றும் அவசியமில்லை. ஏனெனில் இந்த தண்டவாளப் பகுதியில் அடிக்கடி ரயிலில் மோதி பலர் உயிரிழப்பது தொடர்ச்சியாக இடம்பெற்ற வண்ணமே உள்ளது. கவனயீனம் காரணமாகவும் அவதானமின்மையுமே இந்த உயிரிழப்புக்களுக்கு காரணங்கள் என கடந்த கால சம்பவங்களை வைத்து பொலிஸார் கோடிட்டு காட்டுகின்றனர். இந் நிலையில் தான் கடந்த 25ம் திகதி அதே கரையோர ரயில் மார்க்கத்தில், தெஹிவளை ரயில் நிலையத்தை அண்மித்த பகுதியில் ரயிலில்…
