Headlines

இன ஒற்றுமைக்கு வேட்டு வைக்க முயற்சி! அம்பாறை பௌத்த விகாராதிபதியிடம் அமைச்சர் ரிஷாட் எடுத்துரைப்பு!

இனங்களுக்கிடையில் முறுகல் நிலையினை தோற்றுவித்து அதன் மூலம்  மீண்டும் ஓர் இருண்ட யுகத்துக்கு இட்டுச் செல்லும் பணியில் ஒரு சிலர் ஈடுபடுவது நாட்டுக்கு ஆபத்தானதாகும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் அம்பாறையில் தெரிவித்தார். அம்பாறை பிரதான பௌத்த விகாரையின் விகாராதிபதி சீலரத்ன ஹிமியினை அம்பாறை அரசாங்க அதிபர் பணி மனையில் வைத்து சந்தித்து தற்போதைய நிலை தொடர்பில் விளக்கமளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். அமைச்சர் றிசாத் பதியுதீன் இங்கு…

Read More

அம்பாறை நகரில் மிலேச்சத்தனமான தாக்குதல்! அமைச்சர் ரிஷாட் பங்கேற்ற உயர்மட்டக் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள்!

-ஊடகப்பிரிவு-   அம்பாறையில் இடம்பெற்றது போன்று, இந்த நாட்டில் இவ்வாறான மோசமான சம்பவங்கள் இனிமேலும் இடம்பெறாத வண்ணம் பாதுக்காப்புத் தரப்பினர் முன்கூட்டியே நடவடிக்கை எடுத்து அதனை உறுதிப்படுத்த வேண்டுமென, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வலியுறுத்தினார். அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்தில், அரசாங்க அதிபர் துசித பி வனிகசிங்க தலைமையில் இன்று மாலை (28) இடம்பெற்ற உயர்மட்டக் கூட்டத்தில், அமைச்சர் இவ்வாறு வலியுறுத்தினார்.   பொலிஸ், இராணுவ உயரதிகாரிகள் கலந்துகொண்ட…

Read More

சுயதொழில் பயிற்சிகளை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!

-ஊடகப்பிரிவு- மன்னார் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடாத்தப்பட்ட சுய தொழில் பயிற்சிகளை நிறைவு செய்தவடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள  இளைஞர், யுவதிகளுக்கு சான்றிதழ் மற்றும் தொழில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று (27) காலை மன்னார் நகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது. பிரதம அதிதியாக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பிரத்தியேக செயலாளர் ரிப்கான் பதியுதீன் கலந்துகொண்டார். சர்வதேச தொழில் அமைப்பின் (ஐ.எல்.ஓ) நிதி உதவியுடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் அனுசரனையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள…

Read More

பள்ளிவாசலை உடைக்க வேண்டிய தேவை எழுந்தது ஏன்? அம்பாறையில் அமைச்சர் ரிஷாட் கேள்வி!

-சுஐப் எம்.காசிம்- அம்பாறை நகரில் அமைந்துள்ள பள்ளிவாசலை உடைக்க வேண்டிய எந்தவொரு தேவையும் இல்லாத நிலையிலும், எதுவிதக் காரணங்களுமின்றி வேண்டுமென்று நன்கு திட்டமிட்டு இந்தப் பள்ளியை இனவாதிகள் உடைத்து தகர்த்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். விமானப் படைக்குச் சொந்தமான விஷேட விமானம் மூலம் அம்பாறைக்கு விஜயம் செய்திருந்த அமைச்சர் தலைமையிலான குழு தாக்குதலுக்குள்ளான பள்ளிவாசல், கடைகள் மற்றும் தீக்கிரையாக்கப்பட்ட வாகனங்கள் ஆகியவற்றை பார்வையிட்டதுடன், சம்பவம் தொடர்பில் பள்ளி தர்மகர்த்தாக்களிடமும்,…

Read More

‘தயவு தாட்சண்யமின்றி உடன் கைது செய்யுங்கள்’ ஜனாதிபதி, பிரதமரிடம் அமைச்சர் ரிஷாட் வலியுறுத்து!

-ஊடகப்பிரிவு- அம்பாறை நகரில் முஸ்லிம் கடைகளை உடைத்து, பள்ளிவாசலையும் அதனோடு ஒட்டியிருந்த தங்கும் அறைகளையும் நொறுக்கி, வாகனங்களை தீக்கிரையாக்கிய சம்பவம் தொடர்பில் தொடர்புபட்ட அனைத்து நாசகாரர்களையும் உடனடியாக கைது செய்யுமாறு அமைச்சர் ரிசாட் பதியுதீன் ஜனாதிபதியிடமும், பிரதமரிடமும் அமைச்சரவையில் வலியுறுத்தியதோடு இது ஒரு திட்டமிட்ட முஸ்லிம்களுக்கெதிரான சதி நடவடிக்கையென சுட்டிக்காட்டினார். இன்று காலை அமைச்சரவை கூடிய போது அம்பாறை நாசகார நடவடிக்கை தொடர்பில் அமைச்சர்களான, ரவூப் ஹக்கீம், மனோ கனேசன் ஆகியோரும் இந்த சம்பவம் தொடர்பில் அமைச்சரவையில்…

Read More

“கூட்டுறவுத் துறை சார்ந்த பிரச்சினைகள் எதிர்வரும் 03 மாதத்துக்குள் தீர்க்கப்படும்”அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவிப்பு!

-ஊடகப்பிரிவு- கூட்டுறவுத் துறை சார்ந்த அமைப்புக்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் மற்றும் அவ்வமைப்புக்கள் சமர்ப்பித்துள்ள கருத்துக்கள், முன்மொழிவுகள் தொடர்பில் கவனம் செலுத்தி, எதிர்வரும் 03 மாதத்துக்குள் அந்த பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கு தான் நடவடிக்கை எடுப்பதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். கூட்டுறவு துறை சார்ந்த 14 பிரதான அமைப்புகளுக்கும், அமைச்சருக்கும் இடையே கைத்தொழில், வர்த்தக அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது, கூட்டுறவு துறை சார்ந்த…

Read More

‘அம்பாறையில் இடம்பெற்ற அசம்பாவிதம் தொடர்பில் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கவும்’ அமைச்சர் ரிஷாட் பொலிஸுக்கு வலியுறுத்து!

-ஊடகப்பிரிவு- இன்று அதிகாலை (27) அம்பாறை மாவட்டத்திலுள்ள முஸ்லிம் கடையொன்றுக்கு வருகை தந்த ஒரு சில பெரும்பான்மையினத்தவர்களால், கடை உரிமையாளர் மீதும் கடை மீதும் தாக்குதல் நடாத்தப்பட்டதுடன் அருகில் உள்ள பள்ளி மீதும் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.     இந்த அசம்பாவிதம் தொடர்பில் அறிந்து கொண்ட அமைச்சர் ரிஷாட் பதியுதீன், உடனடியாக அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் பிரதான பொலிஸ் பொறுப்பதிகாரிகளை தொடர்பு கொண்டு, இந்த சம்பவங்களை உடனடியாக தடுத்து நிறுத்துமாறும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு…

Read More

கனேவல்பொல தேர்தல் வட்டாரத்தில் இடம்பெற்ற நன்றி நவிலல் நிகழ்வு! இஷாக் எம்.பி பங்கேற்பு!

-ஊடகப்பிரிவு- கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கெக்கிராவ பிரதேச சபைக்கு கனேவல்போல வட்டாரத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில், ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிட்ட ஹபீல் ஆசிரியர் பல சவால்களுக்கு மத்தியில் தேர்தலில் வெற்றியீட்டினார். அந்த வகையில், கனேவல்பொல தேர்தல் தொகுதிக்குட்பட்ட கனேவல்பொல, நிக்கவெவ, ரம்பேவ, ஹீனுக்கிரியாவ, எட்டிவீரவெவ, கந்துபோட ஆகிய பிரதேசங்களில் அணிதிரண்டு வாக்களித்த மக்களுக்கு நன்றி நவிழும் கூட்டங்கள் நேற்று (25) நடந்தேறின. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்…

Read More

“நாட்டின் ஆட்சி மாறினாலும் அமைச்சு மாறினாலும் மக்கள் பலத்துடன் உள்ள மக்கள் காங்கிரஸை என்றும் அசைக்க முடியாது” டாக்டர்.ஹஸ்மியா!

-ஊடகப்பிரிவு- நாட்டின் ஆட்சி மாறினாலும் அமைச்சு மாறினாலும் மக்கள் பலத்துடன் உள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸை என்றும் அசைக்க முடியாது. அக்கட்சியின் தலைமை சமூகம் சார்ந்த போராட்டங்களையும், பணிகளையும் எந்தவித தடைகளுமின்றி தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய மகளிர் அணித் தலைவி டாக்டர். ஹஸ்மியா உதுமாலெப்பை தெரிவித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நிந்தவூர் பிரதேசத்திற்கான மகளிர் அணி காரியாலயத் திறப்பு விழாவும், கட்சியின் வெற்றிக்கு பாங்காற்றிய ஆதரவாளர்களுக்கு…

Read More

அமைச்சர்களான துமிந்த திஸாநாயக்க, விஜித் விஜிதமுனி சொய்சா ஆகியோருக்கு அமைச்சர் ரிஷாட் கடிதம்!

-ஊடகப்பிரிவு- மன்னார் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தற்போது ஏற்பட்டுள்ள வரட்சியினால் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,இவர்களது விவசாய நடவடிக்கைகளுக்கு தேவையான நீரினை குழாய் கிணறுகள் மூலம் பெற்றுக் கொள்ள தேவைாயன வசதிகளை துரித கதியில் மேற்கொள்ள நடவடிக்கையெடுப்பதன் அவசியம் தொடர்பில் மன்னார் மாவட்ட அபிவிருத்தி குழுவின் இணைத் தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் விவசாய அமைச்சர் துமின்த திசநாயக்க மற்றும் நீர்ப்பாசன மற்றும் நீர் முகாமைத்துவ அமைச்சர் விஜித் விஜித முனி சொய்சா ஆகியோரிடத்தில் வேண்டுகோளை முன் வைத்து…

Read More

 வெற்றிப்பாதையை நோக்கி மக்கள் காங்கிரஸ்!

உள்ளுராட்சி தேர்தல் 2018 வெற்றிப்பாதையை நோக்கி மக்கள் காங்கிரஸ்! –கலாபூஷணம் எஸ்.எம்.சஹாப்தீன்- நாடு முழுவதும் எதிர்பார்க்கப்பட்ட – எண்ணிப்பார்க்கப்பட்ட உள்ளுராட்சி மன்றத் தேர்தல் கடந்த 10ஆம் திகதி நடந்து முடிந்துவிட்டது. அதன் முடிவுகள் வெளியாகி, அரசியல் அரங்கில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி, பலரின் சிந்தனையை முடுக்கிவிட்டிருப்பது இன்று ஊரறிந்த உண்மையாகிவிட்டது. உள்ளுராட்சித் தேர்தலை தொடர்ந்து நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் கொதிநிலை மக்களை வெறுப்படையச் செய்துள்ளது. அதற்குக் காரணம் இத்தேர்தல் நாட்டில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தி இருப்பதுதான். தேர்தல்…

Read More

ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அமைச்சர் ரிஷாட் அவசரக் கடிதம்!  

-ஊடகப்பிரிவு- வடக்கு, கிழக்கில் உள்ள வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்புக்களை வழங்கி அவர்களின் குடும்ப வறுமையை போக்குவதோடு, நாட்டின் எதிர்கால அபிவிருத்திக்கு அவர்களின் ஆக்கபூர்வமான பங்களிப்பை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் எழுதியுள்ள அவசரக் கடிதத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அமைச்சர் எழுதியுள்ள கடிதங்களில் கூறப்பட்டுள்ளதாவது, நாட்டிலே படித்த இளைஞர் யுவதிகளும், பட்டதாரிகளும் தொழிலின்றி பெரிதும் அவதியுறுகின்றனர். வறுமைகோட்டின் கீழ் வாழும்…

Read More