புத்தளம் சமூகத்தின் நன்மதிப்பை பெற்றவராக மர்ஹூம் பீ.எம்.ஜனாப் திகழ்ந்துள்ளார் – தலைவர் ரிஷாட் அனுதாபம்!
புத்தளம் பெரிய பள்ளிவாசலின் முன்னாள் தலைவரும் முன்னாள் கிராம அதிகாரியும் சிறந்த சமூக சேவையாளருமான அல்ஹாஜ் பீ.எம்.ஜனாப் அவர்களின் மறைவு தொடர்பில், தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், அன்னாருக்கு இறைவன் ஜென்னத்துல் பிர்தௌஸ் எனும் மேலான சுவன வாழ்வை நல்கப் பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார். மர்ஹூம் பீ.எம்.ஜனாப் அவர்களின் மறைவு குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “புத்தள வரலாற்றில், 1990ஆம் ஆண்டுக்குப் பின்னரான காலப்பகுதியானது…
