News
எந்த சமூகத்தினையும் அடக்கி ஆளும் உரிமை எவருக்கும் இல்லை – அமைச்சர் றிசாத்
(இர்ஷாத் ரஹ்மதுல்லாஹ்) இனவாதமும்,மதவாதமும் ஒரு போதும் வெற்றி கொண்டதாக வரலாறு இல்லையென தெரிவித்துள்ள வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் எந்த சமூகத்தையும் அடக்கி ஆளும் அதிகாரம் இம்மண்ணில் எவ்வாறுக்கு வழங்கப்படவில்லையென்று கூறினார். மன்னார் மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தி தொடர்பில் பிரதேச மட்டத்திலான தெளிவுபடுத்தும் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.. மேலும் அமைச்சர் பேசுகையில் கூறியதாவது – உரிமைகளை வென்றெடுப்பதற்காக மக்களை பிழையாக வழி நடத்த முடியாது.மக்களின் சுதந்திரத்தையும்,அவர்களது…
பௌத்த பயங்கரவாதிகளின் கொட்டத்தை அடக்குவதற்கான இறுதிச் சந்தர்ப்பம் வட முஸ்லிம்களின் கையில் – பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்
(சர்ஜூன் ஜமால்தீன்) அண்மைக்காலமாக முஸ்லிம்களுக்கெதிராக சில பௌத்த பேரீனவாதிகள் பாசிச செயற்பாடுகளை முடக்கிவிட்டுள்ளனர். இதனால் முஸ்லிம்கள் பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். இந்த மதப் பயங்கரவாதிகளை விரட்டியடிப்பதற்கான இறுதிச் சந்தர்ப்பம் வட முஸ்லிம்களின் கையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது என பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். நேற்று 2013-08-29 கற்பிட்டி அல் மனார் முகாமில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இவர் மேலும் உரையாற்றிய வடக்கு முஸ்லிம்கள் 20வருடங்களாக இன்னல்களையே சுமந்து கொண்டிருக்கின்றார்கள். குறிப்பாக வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கு காணிகள் வழங்குவதிலும் அவர்களை மீள் குடியேற்றுவதிலும் இங்க பல தடைகள் ஏற்படுத்தப்படுகின்றன. எனினும் இத்தடைகளை உடைத்து வடக்கு…
வடக்கு முஸ்லிம்களின் இருப்புக்காக வடமாகாண உலமாக்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் -மன்னார் மாவட்ட உலமா சபைத் தலைவர் ஜ}ணைட் மதினி
(சர்ஜூன் ஜமால்தீன்) வடக்கு முஸ்லிம்களின் இருப்புக்காகவும் அவர்களின் மீள்குடியேற்றத்;திற்காகவும் வடக்கில் உள்ள உலமாக்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என புத்தளத்தில் இன்று 2013-08-28 நடைபெற்ற மக்கள் ஒன்று கூடலில் மன்னார் மாவட்ட உலமா சபைத் தலைவர் ஜ}ணைத் மதினி தெரிவித்தார். இங்கு மேலும் உரையாற்றிய அவர் அண்மைக்காலமாக முஸ்லிம்கள் பல இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். முஸ்லிம்களின் பள்ளிவாயல்கள் இனவாதிகளால் தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்;டு வருகின்றன. இத்தருணத்தில் முஸ்லிம் அரசியல் வாதிகள் முஸ்லிம் சமுகத்திற்காக குரல் கொடுக்க வேண்டும் எனினும் சிலர் இப்பிரச்சினையை வைத்து வடக்கில் அரசியல் செய்ய முற்படுகின்றனர்….
இனியும் தமிழ் மக்கள் ஏமாறமாட்டார்கள்-செல்லத்தம்பு உறுதி
1977 ஆம் ஆண்டு தமிழீழ பிரகடனம்,82 இல் மாகாண சபை,83 இல் இனக்கலவரம்,அதனை தொடர்ந்து ஆயுதப் போராட்டம்,90 களில் முஸ்லிம்களின் வெளியேற்றம்,2007 முதல்,2009 வரை நடுப்பகுதி வரை முள்ளிவாய்க்கால் அவலம் நிகழ்ந்தது இதனை சர்வதேச சமூகம் பார்த்துக் கொண்டுதான் இருந்தது,அதே போன்று தான் இந்த மாகாண சபைத் தேர்தலையும் சர்வதேச பார்த்துக் கொண்டு மட்டும் இருக்கும் என மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பிரதேச அபிவிருத்தி குழுவின் தலைவர் சந்தியாகோ செல்லத்தம்பு தெரிவித்தார். எதிர்வரும் வடமாகாண சபை தேர்தல்…
வடக்கு முஸ்லிம்கள் குறித்து பேச அருகதை இல்லை
தமிழ் தேசிய கூட்டமைப்பு இனவாதத்தையும்,மதவாதத்தையும் பேசுவதாகவும்,ஸ்ரீ்லங்கா முஸ்லிம் காங்கிரஸூக்கு வடக்கு முஸ்லிம்கள் குறித்து பேசுவதற்கு எவ்வித உரிமையும் கிடையாது என தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் வடக்கு மக்கள் வசந்தத்தை அனுபவிக்க வேண்டுமெனில் எமது அணியுடன் அணி திரவள்வதே தான் இன்றைய தேவையென்றும் கூறினார். மன்னார் தாராபுரத்தில் இன்று மாலை இடம் பெற்ற மக்கள் சந்திப்பின் போது மேற்கண்டவாறு அமைச்சர் கூறினார். மேலும் அமைச்சர் பேசுகையில் தெரிவித்ததாவது – இன்று…
முள்ளியாவலையில் அமைச்சர் றிசாத் பதியுதீன் மற்றும் கணகரத்தினம் என்பவர்கள் காடழிப்பு செய்கின்றார்கள் என்பதில் உண்மையில்லை- ஹூனைஸ் எம்.பி
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள காடுகளை அமைச்சர் றிசாத் அழிப்பதாகவும்,அதற்கு துனையாக கணகரத்தினம் இருப்பதாக அதிரடி இணையத்தில் வெளியான செய்தி தொடர்பில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,புதுக்குடியிறுப்பு அபிவிருத்தி குழுவின் தலைவருமான சட்டத்தரணி ஹூனைஸ் பாருக் விளக்கமொன்றை ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளார். வடக்கில் பயங்கரவாதிகளினால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் 1990 ஆம் ஆண்டு முதல் புத்தளம் உள்ளிட்ட பல பாகங்களிலும் அகதி முகாம்களில் வாழ்ந்து வந்தனர்.அதே போல் தான் முல்லைத்தீவு மாவட்டத்தில் வாழ்ந்த முஸ்லிம்களும் வெளியேற்றப்பட்டனர்.அதன் பிற்பாடு இற்றைக்கு 3 வருடங்களுக்கு…
அமைச்சர் றிசாத் பதியுதீன் கிரேண்பாஸ் பள்ளிவாசலுக்கு விஜயம்
கொழும்பு கிரேண்ட் பாஸ் பள்ளிவாசல் மீது நடத்தப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதல் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டம் என்பதை வலியுறுத்தியுள்ள அமைச்சர் றிசாத் பதியுதீன்,இது குறித்து இன்று பிரதமர் தி.மு.ஜயரத்னவையும் சந்தித்துள்ளார். அதே வேளை இன்று காலை மீண்டும் கிரேண்ட் பாஸ் பள்ளிக்கு சென்ற அமைச்சர் அங்கு சேதத்துக்குள்ளானதை பார்வையிட்டுள்ளார் சம்பவம் குறித்து கேள்வியுற்றதும் வன்னியில் தேர்தல் பிரசாரத்தில் இருந்த அமைச்சர் றிசாத் பதியுதீன் உடனடியாக கொழும்பு திரும்பியதுடன்,கிரேண்ட் பாஸ் பள்ளிவாசலுக்கும் விஜயம் செய்தமை குறிப்பிடத்தக்கது.
யுத்தம் எம்மிடமிருந்து பறித்ததை தற்போது நாம் அரசிடம் இருந்து பெறும் சந்தர்ப்பம் எற்பட்டுள்ளது.-மன்னார் மாவட்ட முதன்மை வேட்பாளர் றிப்கான் பதியுதீன்
கடந்த யுத்தம் ஏற்படுத்திய பாதிப்புக்களால் எமது மாவட்ட மக்கள் இழந்தது ஏராளம்.அவற்றில் பெறக் கூடியவற்றை பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பம் ஆளும் கட்சியினை ஆதரிப்பதன் மூலம் மட்டுமே பெற்றுக் கொள்ள முடியும் என்று வடமாகாண சபைக்கு ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மன்னார மாவட்ட முதன்மை வேட்பாளராக போட்டியிடும் அப்துல் றிப்கான் பதியுதீன் கூறினார். தலைமன்னார் பியர் கிராமத்தில் இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். மேலும் றிப்கான் பதியுதீன் உரையாற்றுகையில்…
கட்டார் பேரீத்தம்பழம் ஆண்டியாப் புளியங்கள மக்களுக்கு வழங்கி வைப்பு
இலங்கை முஸ்லிம்கள் நோன்ப திறப்பதற்கென கட்டார் அரசாங்கம் பேரீத்தம் பழங்களை அன்பளிப்பு செய்துள்ளது.ஷேஹ் ஜாசிம் பின் ஜபூர் அல் தானி நன்னொடை அமைப்பினால் வழங்கப்பட்ட பேரீத்தம் பழங்கள் வவுனியா மாவட்டத்தில் அமைந்துள்ள ஆண்டியாப் புளியங்குளம் கிராமம மக்களுக்கு ஆண்டியாப் புளியங்குளம் பாடசாலையில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது. கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன்,கட்டார் துாதுவரலாயத்தின் செயலாளர் அன்சாரி,வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக் ஆகியோர் இவற்றை வழங்கி வைத்தனர்
13th Amendment to Constitution not the solution – ACMC
The securing of seats by the Muslims at the forthcoming Northern Provincial Council Elections will be affected if the Sri Lanka Muslim Congress (SLMC) goes it alone, said Y.L.S Hameed Secretary General, All Ceylon Muslim Congress (ACMC) in an interview with the Sunday Observer. Question: The SLMC has a strong vote base in the North. Would…
முஸ்லிம்களும் இந்த நாட்டு மக்கள் என்பதை ஞாபகப்படுத்தினார் –ஹூனைஸ் பாருக் எம்.பி
முல்லைத்தீவு மாவட்டத்தில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு தடையாக உள்ள காரணிகள் குறித்து உரிய கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,சட்டத்தரணியுமான ஹூனைஸ் பாருக் இன்று இடம் பெற்ற மீள்குடியேற்ற அமைச்சின் ஆலோசனைக் குழு கூட்டத்தின் போது மீள்குடியேற்ற அமைச்சர்,பிரதி அமைச்சர்,செயலாளர் ஆகியோரிடம் கேட்டுள்ளார். மீள்குடியேற்ற அமைச்சின் ஆலோசனைக் குழு கூட்டம் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் மீள்குடியேற்ற அமைச்சர் குணரத்ன வீரகோன் தலைமையில் இன்று இடம் பெற்றது.இதன் போது அமைச்சர் றிசாத் பதியுதீன்,மீள்குடியேற்ற பிரதி அமைச்சர்…
இந்தியாவின் புத்தகயா மீதான தாக்குதல் கண்டிக்கத்தகது-அமைச்சர் றிசாத் பதியுதீன்
இந்தியாவின் புத்தகாயாவில் உள்ள பௌத்த மதத் தளத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவமானது வேதனை தரும் ஒன்றாகும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளார். உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு மொரீஸியஸ் நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர் றிசாத் பதியுதீன் இன்று பிற்பகல் நாடு திரும்பினார். மதங்கள் மனிதர்களை நேர்வழிப்படுத்தவே தோற்றம் பெற்றன.அகிம்சை,கருணை,விட்டுக் கொடுப்பு,புரிந்துணர்வு,ஒருவருக்கொருவர் பரஸ்பரம் என்பதை எடுத்துயியம்பிவரும் மதங்கள்,ஒரு போதும்,பிரிவினை வாதத்துக்கும்,இன முரண்பாடுகளுக்கும் வித்திடுமாறு கோறவில்லை என்பதை…
