பிரபல எழுத்தாளரும், பன்னூலாசிரியருமான புன்னியாமீன் வபாத்
– ஜுனைட் எம்.பஹ்த் – இலங்கையின் பிரபல எழுத்தாளரும், பன்னூலாசிரியருமான புன்னியாமீன் (பீர் முஹம்மது புன்னியாமீன்) இன்று (10) காலை காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அண்மையில் சவூதி அரேபியா சென்றிருந்த இவர், இலங்கை திரும்பும் தறுவாயில் திடீர் சுகயீனமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தது குறிப்பிடத்தக்கது. இலங்கையின் மத்திய மலைநாட்டின் தலைநகர் கண்டி மாநகருக்கு அருகேயுள்ள உடதலவின்ன எனும் ஊரைப் பிறப்பிடமாகக் கொண்டவர் பீர் முகம்மது புன்னியாமீன். இவர் சைதா, உம்மா தம்பதியினரின் புதல்வர்….
