அஸ்கிரிய பீடத்தின் புதிய மகாநாயக்கராக ஞானரத்ன தேரர் தெரிவு
பௌத்த பீட சியாமோபாலி மகா நிகாயாவின் அஸ்கிரிய பிரிவின் அனுநாயகத் தேரரான வண. வரகாகொடை ஞானரத்தன தேரர் இன்று மாலை அஸ்கிரிய பீடத்தின் 22 வது மகாநாயக்கத் தேரராக தெரிவு செய்யப்பட்டார். அஸ்கிரிய பீடத்தின் பௌத்த தேரர்களது நிர்வாக சபையினர் ஒன்று கூடி அவரைத் தெரிவு செய்தனர். ஆஸ்கிரிய பீடத்தின் 21 வது மகாநாயக்கராக பதவிவகித்து மரணமான கலகம ஸ்ரீ அத்ததஸ்ஸி அவர்களது இடத்திற்கே இவர் 22 வது மகாநாயக்கராகத் தெரிவானார். ராஜகருனா நவரத்தன அத்தபத்து வாசல…
