Headlines

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் : விரைவில் நீதிமன்றத்திற்கு..!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மேலும் பிற்போடப்பட்டால் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராய்ச்சி தெரிவித்துள்ளார். எதிர்வரும் நாட்களில் இருக்கும் நிலைமைகளை கருத்தில் கொண்டே குறித்த சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளபடவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதேவேளை, எதிர்வரும் ஆண்டின் முதற் பகுதியிலேயே தேர்தலை நடாத்த முடியும் என உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி எல்லை நிர்ணயம் தொடர்பிலான மேன்முறையீடுகளை விசாரணை செய்வதற்கு…

Read More

இந்த வருடம் தேர்தல் இல்லை!

அடுத்த வருட ஆரம்பத்தில் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடைபெறலாம் என, உள்ளூராட்சிமன்ற மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (2) இடம்பெறும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். எல்லை நிர்ணயத்துக்கான, எல்லை நிர்ணய ஆணைக்குழுவால் வழங்கப்பட்டுள்ள காலஎல்லை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 31ம் திகதியுடன் நிறைவடைகின்றது. இந்தநிலையில் குறித்த காலஎல்லை, மேலும் ஒரு வருடங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே, ஜனாதிபதி கூறியதற்கு இணங்க, அடுத்த வருடம் உள்ளூராட்சிமன்றத் தேர்தல்கள் நடைபெறும் என,…

Read More

உள்ளுராட்சி சபைத் தேர்தலை யாருக்கும் பயந்து பிற்போடவில்லை

உள்ளுராட்சி சபைத் தேர்தலை யாருக்கும் பயந்து பிற்போடவில்லையென அமைச்சர் பைஸர் முஸ்தபா குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். எல்லை நிர்ணய நடவடிக்கைகள் நிறைவடையாமையினாலேயே உள்ளுராட்சி சபைத் தேர்தலை நடத்த முடியாத நிலை காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது கட்சியின் தலைமைத்துவத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஒப்படைத்துவிட்டு பின்னர் காலை பிடித்து இழுப்பது பொருத்தமற்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம்…

Read More

ஜனாதிபதி எப்போதும் பொதுமக்களுடனேயே ஒப்பந்தங்கள் வைத்துள்ளார்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வேறு எவருடனும் ஒப்பந்தங்கள் எதுவும் வைத்திருக்கவில்லை, அவர் எப்போதும் பொதுமக்களுடனேயே ஒப்பந்தங்களை வைத்துள்ளார் என அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்தார். நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர், ஜனாதிபதியிடம் எந்தவிதமான அரசியல் ஒப்பந்தங்களும் இல்லை. அவர் ஜனவரி 08 ஆம் திகதி மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் முகமாகவே செயற்பட்டு…

Read More

நாகதீபத்தின் பெயரை மாற்ற முடியாது! பைஸர் முஸ்தபா மறுப்பு

யாழ்ப்பாண தீபகற்பத்திற்கு உட்பட்ட நாகதீபம் என்ற தீவின் பெயரை மாற்றுவதற்கு முடியாது என்று உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார். கடந்த 5ம் திகதி வடமாகண சபை அமர்வின் போது பெயர் மாற்றம் தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் இது குறித்து கருத்து வெளியிடும் போது அமைச்சர் இந்த தகவலை வெளியிட்டார்.

Read More