Breaking
Sun. Dec 14th, 2025

பழுலுல்லாஹ் பர்ஹான்

நடந்து முடிந்த 2015 ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வெற்றியினையொட்டி அ.இ.ம.காநடாத்தும் மக்கள் சந்திப்பும் ,கலந்துரையாடலும் இன்று (30-01-2015) வெள்ளிக்கிழமை இரவு 8 மணிக்கு காத்தான்குடி கடற்கரையிலுள்ள ஆ.ம. ஹாஜியார் காணியில் நடைபெறவுள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மட்டக்களப்பு தேர்தல் தொகுதி பிரதம இணைப்பாளருமான சிப்லி பாரூக் தெரிவித்தார்.

இம் மக்கள் சந்திப்பிலும் ,கலந்துரையாடலிலும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும்,வாணிப அலுவல்கள் அமைச்சருமான றிஷாட் பதியுதீனும் வீடமைப்பு ,சமுர்த்தி பிரதியமைச்சர் எம்.எஸ். எஸ்.அமீர் அலியும் கலந்து கொள்ளவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related Post

Comments are closed.