அஸ்ரப். ஏ. சமட்
இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொழும்பு மேயா் முசம்மில் அமைச்சா் கருஜயசுரிய சுவாமிநாதன் ஆகியோா் மீண்டும் நெலும் பொக்குனு மாவத்தையை ஆனந்தக் குமாரசுவாமி மாவத்தை என மீள வீதியின் பெயா்பலகையை நேற்று திறந்து வைத்தனா்.
-தாமரைத் தடாகம் அமைக்கப்பட்டதன் பின்னர் அதனுடன் இனனைந்த ஆனந்த குமார சுவாமி மாவத்தை வீதியானது மஹிந்த ராஜபக்ஷ தாமரைத் தடாக மாவத்தை என 2011 டிசெம்பர் 15 பெயர்மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. தற்போது இவ் வீதி மீண்டும் ஆனந்த குமார சுவாமி மாவத்தை எனப் பெயரிடப்பட்டுள்ளது.
ஆனந்த குமாரசுவாமி இலங்கைக்குப் பெருமை சேர்த்த ஆசியாவின் சிரேஷ்ட அதி உயர் வரலாற்று மகானாவார். இருந்தபோதும் மஹிந்த ராஜபக்ஷ தன்னுடைய ஆட்சியின் அதிகாரத்தினால் அப்பெயரை நீக்கி விட்டு தன்னுடைய பெயரை வீதிக்கு சூட்டியிருந்தார்.இது தொடர்பாக மக்கள் பெரும் எதிர்ப்புத் தெரிவித்த போதும் புதிய அரசாங்கம் மீண்டும் பழைய பெயரை இட்டமை வரவேற்கத்தக்க விடயமென மக்கள் கருத்துத் தெரிவிக்கின்றன ,

