குழந்தைகள் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக டி.வி பார்த்தால் ரத்தகொதிப்பு அதிகரிக்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. இது குறித்து பிரேசில் ஆய்வாளர் அகஸ்டோ சீஸர் எப்.டி. மோராயஸ் நடத்திய ஆய்வில், ஸ்பெயின், ஜெர்மனி, ஹங்கேரி, இத்தாலி, சைப்ரஸ், ஸ்வீடன் மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகளில் இருந்து 2 முதல் 10 வயது குழந்தைகளான 5 ஆயிரத்து 221 பேர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
இதற்காக குழந்தைகளை அவர்களுக்கு பிடித்த சேனல்களை பார்க்க வைத்து சோதனை நடத்தப்பட்டது. இதில் தொடர்ந்து 2 மணி நேரத்திற்கும் மேலாக டி.வி சேனல்களை பார்த்து வந்த குழந்தைகளுக்கு 30 சதவீதம் ரத்த கொதிப்பு அதிகரித்துள்ளது. இந்த ஆய்வில் குழந்தைகள் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக டி.வி பார்க்க அனுமதிக்க கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

