Breaking
Sun. Dec 7th, 2025

இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக அடுல் கெஸ்பா நியமிக்கப்படவுள்ளதாக வொஷிங்கடனிலுள்ள இராஜாங்க செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

இவரின் இந்த நியமனத்திற்கு அமெரிக்க காங்கிரஸ் விரைவில் அங்கீகாரம் வழங்கவுள்ளது எனவும் செயலக வட்டாரங்கள் குறிப்பிட்டன.

முன்னாள் அமெரிக்க தூதுவர் மிச்சேல் ஜே. சிசென், அமெரிக்காவின் ஐக்கிய நாடுகளுக்கான பிரதிநிதியாக நியமிக்கப்பட்டதை அடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அவர் நாடு திரும்பினார்.

இதனால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கே நியமிக்கப்படவுள்ளார். தற்போது இவர் வொஷிங்கடனிலுள்ள இராஜாங்க செயலகத்தில் தெற்காசிய விவகாரங்களுக்கான பிரதி உதவி செயலாளகராக கடமையாற்றுக்கின்றார்.

அமெரிக்காவின் தெற்காசிய விவகாரங்களுக்கான பிரதி செயலாளர் நிஷா பிஸ்வால் அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்தபோது அவருடன் இவரும் இலங்கை வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Post