இவரை பற்றிய தகவலை கோருகிறது பொலிஸ்;.!

0
338
சர்வதேச போதைப்பொருள் வர்த்தகரான ‘வேலே சுதா’வுடன் தொடர்புடைய தலைமறை வாகியுள்ள மொஹமட் மக்கீம் மொஹமட் சித்தீக் என்பவரின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் குறித்து தகவல்களை தந்துதவுமாறு பொலிஸ் தலைமையகம் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளது.
தற்போது துபாய் அல்லது பாகிஸ்தானில் தலைமறைவாகியிருக்கும் மொஹமட் சித்தீக் என்பவருக்கு சர்வதேச பொலிஸாரூடாக விடுக்கப்பட்டுள்ளதுடன் இவர் தொடர்பாக சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதற்கு ஏதுவாக விசாரணைகளை முன்னெடுப்பதற்கு இலங்கையில் அவரது பெயரில் அசையும் அல்லது அசையா சொத்துக்கள் இருக்குமாயின் இதுகுறித்து உடனடியாக தகவல் தருமாறும் பொலிஸ் தலைமையகம் கேட்டுள்ளது.
இவர் வெலே சுதாவின் போதைப் பொருள் வர்த்தகத்தின் பிரதான நபராக கருதப்படுவதுடன் இவருக்கு சித்தீக் என்பதற்கு மேலதிகமாக பளூல்தீன் அல்லது அகீல் என்ற பெயர்களும் உள்ளன. இல. 133 மொஹிடீன் மஸ்ஜித் வீதி, கொழும்பு – 10, இல. 156 , மொஹிடீன் மஸ்ஹீத் வீதி, கொழும்பு – 10 என்ற இரண்டு விலாசங்களில் பதிவிடங்களாக குறிப்பிடப்பட்டுள்ளன.
இவரது வங்கி கணக்கு, அல்லது நிதி நிறுவனங்களின் கணக்கு உள்ளிட்ட அசையும் அசையா சொத்துக்கள் குறித்து தகவல்களை தந்துதவுமாறும் பொலிஸ் தலைமையகம் பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறது.
பொலிஸ் போதைவஸ்து ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் – 011-2447943 அல்லது போதைவஸ்து பிரிவு பொறுப்பதிகாரி – 011-2446437 அல்லது குற்றப் புலனாய்வு பிரிவு 011 – 2328043 அல்லது 0112422176 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொண்டு இது தொடர்பாக அறிவிக்கலாம் என்றும் பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here