Breaking
Sun. Dec 7th, 2025

கனடாவில் மர்மமான சுரங்கபாதை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. ரொறொன்ரோவில் Pan Am விளையாட்டுக்கள் நடைபெறவுள்ள‌ இடத்திற்கு அருகே இந்த சுரங்கப் பாதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதாவது, ரொறொன்ரோவின் றெக்சால் சென்ரர் மற்றும் யோர்க் பல்கலைகழகத்தின் கீழ் வளாகம் ஆகிய பகுதிகளிற்கு அருகில் உள்ள காட்டு பகுதியில் இந்த சுரங்கபாதை தோண்டப்பட்டுள்ளது.

இந்த சுரங்கபாதையானது ஒருவர் நிற்பதற்கு போதுமான அளவுடையதாக 2.5 மீற்றர்கள் உயரம், கிட்டத்தட்ட 7 மீற்றர்கள் நீளமுடையதாகவும் அமைக்கப்பட்டுள்ளது. சுரங்கபாதைக்குள் ஒரு ஜெனரேட்டர் மூலம் விளக்குகள் இயக்கப்படுவதுடன் சுவர்களும் உட்கூரைகளும் வலுப்படுத்தப்பட்டும் உள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த‌ சுரங்கப்பாதை தற்சமயம் அதிகாரிகளால் நிரப்பப்பட்டுள்ளதாக விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், ரொறொன்ரோ பொலிசார் இந்த மர்ம சுரங்கபாதை சம்பந்தமாக கருத்து தெரிவிக்க மறுத்து விட்டனர்.

Related Post