Breaking
Sun. Dec 7th, 2025

அஸ்ரப் ஏ சமத்

பிரதியமைச்சர் எம்.எஸ் தொளபீக் திருகோணமலை மாவட்ட இரானுவ உயர் அதிகாரியைச் சந்தித்து திருகோணமலை-மட்டக்களப்பு வீதியில் சில வருடங்களாக இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள காணியை விடுவிக்குமாறு வேண்டிக் கொண்டார்.

இதனை ஏற்றுக்கொண்ட இரானுவ கட்டளைத் தளபதி மேஜர் மன்சுலவுக்கு உடன் இக் காணியை விடுவிக்குமாறு வேண்டிக் கொண்டார். அதன் நிமித்தம் இக் காணியை நேற்று புதிதாக பதவியேற்ற கிழக்கு முதலமைச்சர் நசீர் அஹமட் மற்றும் செயலாளர் அசீஸ், மாகாணசபை உறுப்பினர் நிகார், பிரதேச செயலாளர் அனஸ், திட்டமிடல் அலுவலகர் முஜீப் ஆகியோர் இக் காணியை பார்வையிட்டனர்.
அத்துடன் 100 நாள் வேளைத் திடடத்தின் கீழ் நேரடியாக விஜயம் செய்து அக் காணியை அவதாணித்து கின்னியாவுக்கான பஸ் நிலையத்தினை நிர்மாணிப்பதற்கு அனுமதியை வழங்கினார்.

Related Post