Breaking
Sun. Dec 7th, 2025

சிலி நாட்டின் ஆண்டஸ் மலைத்தொடரின் அடிவாரம் அருகே ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானது.இதில் அந்நாட்டு முன்னாள் தூதர் உள்பட மூவர் பலியானார்கள்.

சாண்டியாகோவில் இருந்து 570 கி.மீ தொலைவில் உள்ள ஆண்டஸ் மலைத்தொடரில் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. மலைத்தொடரின் அடிவாரத்தில் விழுந்தவுடன் ஹெலிகாப்டர் தீப்பிடித்தது. இதில் முன்னாள் தூதரும் தொழிலதிபருமான இடாலோ சுனினோ உள்பட மூவர் பலியானார்கள். ஒருவர் மட்டும் ஹெலிகாப்டரிலிருந்து குதித்து உயிர் தப்பினார்.

உயிரிழந்தவர்களின் சடலம் நேற்று காலை மீட்கப்பட்டது. காயமடைந்தவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்த அந்நாட்டு விமான போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.

Related Post