Shm Wajith
மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேசத்தில் உள்ள யுவதிகள் கைத்தொழில் துறையில் வேலைவாய்ப்புகளை பெற்று கொள்ளும் நோக்குடனும் கடந்த 21,22ஆம் திகதி 18 தையல் பயிற்சி நிலையங்களை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி தலைவரும்,கைத்தொழில் வாணிப துறை அமைச்சருமான றிஷாத் பதியுதின் திறந்து வைத்தார்.
இன் நிகழ்வில் அமைச்சர் தெரிவிக்கும் போது
கடந்த காலத்தில் எமது சமுகம் பல்வேறுபட்ட அழிவுகளையும்,இழப்புகளையும் எதிர் நோக்கின சமுகமாக இருக்கின்றது.
நீங்கள் எல்லோரும் மிகவும் அதிஷ்ட சாலிகள் ஓவ்வெரு நிலையத்திற்கும் 20 யுவதிகள் மட்டும் தெரிவு செய்யபட்டுள்ளார்கள்.
எனவே நிங்கள் அதிஷ்டசாலியாக தெரிவு செய்யபட்டுள்ளிர்கள்.
இந்த தையல் பயிற்சி வகுப்புகளை நிறுத்துவதற்கு எத்தனையே! சூழ்ச்சிகள் இடம்பெற்று வருகின்றது.
என அமைச்சர் றிஷாட் பதியுதின் தெரிவித்தார்.
இன் நிகழ்வில் முசலி பிரதேச சபை எஹியான்,பிரதேச செயலாளர் இன்னும் பிரதேச இணைப்பாளர்கள் கலந்து கொண்டார்கள்.

