Breaking
Mon. Dec 15th, 2025

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவை விசாரணை செய்ய சர்வதேச பொலிஸாரின் உதவியை நாடவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித்த சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

இது குறித்து வெளிநாட்டு செய்தி சேவை ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ள அமைச்சர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக செயற்பட்ட பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக ஊழல், நிதி மோசடி தொடர்பில் குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன. அவர் தற்போது தனது மனைவியுடன் அமெரிக்காவில் வசித்து வருகின்றார். எனவே அவரிடம் விசாரணைகளை மேற்கொள்ள சர்வதேச பொலிஸாரின் உதவியை நாட உள்ளோம் என்றார்.

இதேவேளை அமெரிக்க பிரஜா உரிமை பெற்றுள்ள பசில் ராஜபக்ஷ மற்றும் அவருடைய மனைவி ஆகியோர் லொஸ்ஏஞ்சல்ஸ் நகரில் வாழ்ந்து வருகின்றனர். மேலும் பசில் ராஜபக்ஷ இம் மாதம் 18 ஆம் திகதி நாடு திரும்ப உள்ளதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Post