Breaking
Sun. Dec 7th, 2025

மன்னார் மாவட்டத்தின் முசலி பிரதேச செயலகப் பிரிவில் உள்ள மறிச்சுக்கட்டி,கரடிக்குளி,பாலக்குளி,கொண்டச்சி.காயாக்குளி,தம்பட்டை முதலியார் கட்டு,கொக்குபடையான்,கொண்டச்சிகுடா,சிலாவத்துறை கிராமங்களுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் விஜயமொன்றினை(2015-02-21) மேற்கொண்டார்.

முசலி பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தி தொடர்பிலும்,மக்களது தேவைகள் தொடர்பிலும் கேட்டறிந்து கொள்ளும் வகையில் அமைச்சர் தலைமையிலான குழுவினரின் விஜயம் அமைந்திருந்ததாக முசலி பிரதேச சபை தவிசாளர் தேசமான்ய யஹ்யான் தெரிவித்தார்.

அமைச்சர் றிசாத் பதியுதீன்,வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன்,முசலி பிரசேசபை தவிசாளர் எஹியான்,பிரதி தலைவர் பைரூஸ்,மன்னார் நகர சபை உறுப்பினர் நிலாமுதீன் நகுசீன் உள்ளிட்ட பலரும் இதன் போது சமூகமளித்திருந்தனர்.

ஜனாதிபதி தேர்தலிற்கு முன்னர் அமைச்சரினால் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு அபிவிருத்திகளை தொடர்ந்து மேற்கொள்வதற்கான பணிப்புரையினை அமைச்சர் இதன் போது அதிகாரிகளிடத்தில் முன் வைத்தார்.

அதே வேளை மீள்குடியேறியுள்ள மக்கள் எதிர் கொள்ளும் பல் வேறு பிரச்சினைகள் தொடர்பில் மக்களுடன் கலந்துரையாடிய அமைச்சர் றிசாத் பதியுதின்,உடனடியாக இது தொடர்பில் பல தீர்வுகளையும் பெற்றுக் கொடுத்தார்.

அதே வேளை கடற்பனையினரால் நிர்வாகிக்கப்படும் பொது மக்களின் காணி தொடர்பில் கடற்படை அதிகாரிகளுடன் கலந்துரையாடிய அமைச்சர்,இதனை மக்களின் பாவணைக்கு வழங்குவது தொடர்பில் விளக்கத்தையளித்ததுடன்,விவசாய நடவடிக்கைகளுக்காக இந்த காணிகளை உரியவர்களிடத்தில் கையளிப்பது தொடர்பிலும் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டுவந்தார்.

காயாக்குளி கிராம மக்களை சந்தித்த அமைச்சர் றிசாத் பதியுதீன் அம்மக்களினால் முன் வைக்கப்பட்ட கோறிக்கைகள் தொடர்பில் உடனடிhயக செயற்பட்டு பாடசாலை மாணவர்களின் நலன் கருத்தி போக்குவரத்து வசதியினை ஏற்படுத்தும் பணிப்புரையினை உரிய அதிகாரிகளுக்கு தொலைபேசி மூலம் பணிப்புரையினை விடுத்தமைக்கு அம்மக்கள் அமைச்சருக்கு இதன் போது நன்றி தெரிவித்தனர்.

வீடமைப்பு திட்டம்,நீர்ப்பாசனம்,தொழில் வாய்ப்பு,விவசாயம்,கடற்றொழில் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு உரிய தீர்வினை பெற்றுக் கொடுக்கும் வகையில் ஏற்பாடுகளை மேற்கொண்டதுடன்,காணி தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக் கொடுக்கும் வகையில் மேற்குறிப்பிட்ட கிராமங்களை உள்ளடக்கி பிரதி நிதிகளுடன்,கடற்படை அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களையும் அமைச்சர் றிசாத் பதியுதீன் ஏற்படுத்தி கொடுத்தார்.

Related Post