Breaking
Mon. Dec 15th, 2025

கைத்தொழில்.வணிகத் துறை அமைச்சின் கீழ் மன்னார் மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் ஆராயும் கூட்டமொன்று மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம் பெற்றது
.
அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமையில் இடம் பெற்ற இந்த கூட்டத்தில் அரசாங்க அதிபர் தேசப் பிரிய உள்ளிட்ட அதிகாரிகள்.மற்றும் பிரதேச செயலாளர்கள் இதன் போது சமூகமளித்திருந்தனர்.

இதன் போது கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்டுவந்த அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் எதிர்காலத்தில் திட்டமிடப்பட்டுள்ள அபிவிருத்திகள் தொடர்பிலும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

கடந்த சில மாதங்களாக தையல் பயிற்சிகள் இடை நிறுத்தப்பட்டிருந்தன.அதனை மீள ஆரம்பிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் உடன் ஆரம்பிக்குமாறு அமைச்சர் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.

Related Post