Breaking
Sun. Dec 7th, 2025

பிரபல பாடசாலைகளுக்கு தரம் ஐந்திற்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகளை எதிர்வரும் 16 ஆம் திகதி திங்கட்கிழமைக்கு முன் முடித்துக் கொள்ளுமாறு கல்வி அமைச்சு குறித்த பாடசாலைகளின் மேலதிகாரிகளுக்கு அறிவித்துள்ளது.

மேலும் 05 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து பிரபல பாடசாலைகளுக்கு உள்வாங்கப்படாத மாணவர்களின் மேன் முறையீட்டுக்காக 16 ஆம் திகதிக்குப் பின்னர் இரண்டு வாரங்கள் அளவில் வழங்குவதற்கும் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

பாடசாலைகள் கிடைக்காமை, வேறு பாடசாலைகளை பெற்றுக் கொள்ளல், விண்ணப்பிக்காத பாடசாலைகளை பெற்றுக் கொள்ளல், போன்ற காரணங்களுக்காக மேன்முறையீடு செய்யலாமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை பிரபல பாடசாலைகளுக்கு உள்வாங்குவதற்கான வெட்டுப்புள்ளிகள் கடந்த 30 ஆம் திகதி வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Post