Breaking
Sun. Dec 7th, 2025

இலங்கையின் முன்னணி ரகர் வீரர்களில் ஒருவரான மொஹமட் தாஜூடின் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னர் மர்மமான முறையில் மரணமாகியிருந்தார். அவர் கொலை செய்யப்பட்டு,அவரது சடலம் வாகனத்தில் போட்டு எரிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சுமத்தப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோசிதவிற்கும் இந்தக் கொலைக்கும் தொடர்பு இருப்பதாக சில ஊடகங்களில் அண்மையில் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

பிரபல அரசியல் மறைகரமொன்று செயற்பட்டதனால் விசாரணைகள் மூடிமறைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. தாஜுடின் கொலை தொடர்பான இரசாயன பகுப்பாய்வு அறிக்கை இரண்டரை ஆண்டுகள் கடந்தும் இன்னமும் சமர்ப்பிக்கப்படவில்லை. காதலி ஒருவர் தொடர்பில் இந்த முரண்பாடு நீடித்து வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

நரஹேன்பிட்டி பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் உடல் கருகி தாஜுடின் உயிரிழந்தார். எனினும் தாஜுடினின் பணப் பை வேறும் ஓர் இடத்திலிருந்து மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எனவே மரணம் தொடர்பில் நிலவி வரும் மர்மங்களைக் களைய மீளவும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட உள்ளது.

Related Post