Breaking
Mon. Dec 15th, 2025

-ஜி.கே.கிஷாந்தன்-

பொலிஸாரிடமிருந்து தப்புவதற்காக மேல் கொத்மலை நீர்தேக்கத்தில் குதித்து காணாமல் போன இளைஞனின் சடலம் இன்று மாலை மீட்கப்பட்டுள்ளது.

தலவாக்கலை நகரில் நேற்று பாதுகாப்பு நடவடிக்கையில் இருந்த பொலிஸார் 20 வயதான மாரிமுத்து மனோஜ் எனும் இளைஞர் பாபுள் வெற்றிலையை வைத்திருந்ததாக கூறி கைது செய்ய முயற்சித்துள்ளனர்.

இதனால் குறித்த இளைஞன் பொலிஸாரிடமிருந்து தப்பித்து ஓடியுள்ளான். எனினும் குறித்த இளைஞனை  பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் பின் தொடர்ந்துள்ளனர்.

இதனை அவதானித்த இளைஞன் மேல் கொத்மலை நீர்தேக்கத்தில்  நேற்று பி.ப 3.00  மணியளவில் குறித்த இளைஞர்  40 அடி உயரத்தில் இருந்து பாய்ந்து காணமல் போய்யுள்ளார்.

இச்சம்பவத்தினை கண்டித்து தலவாக்கலையில் இன்று பாரிய ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது. குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கண்ணீர் புகை தாக்குதலை மேற்கொண்டு கலைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் குறித்த இளைஞனின் சடலம் இன்று மாலை கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Post