Breaking
Sun. Dec 7th, 2025

சிறுவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவர்களுக்கு ஆயுள்தண்டனை வழங்கும்  வகையில் சட்டங்களை  கடுமையாக்கவுள்ளதாக சிறுவர் விவகார இராஜங்க அமைச்சர் ரோசி சேனாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் நீதி அமைச்சர் மற்றும் பிரதி நீதியமைச்சர் ஆகியோருடன் கலந்துரையாடப்பட்டுவருவதாக  அமைச்சர் தெரிவித்தார்.

சிறுவர்களை முறையாக பராமரித்து அவர்களது உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கு பதிலாக இன்று நாட்டில் காணப்படும் நிலைமை கவலையளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் பிணையில் விடுவிக்கப்படுவதை தடுக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டுவரப்படவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் ரோசி சேனாநாயக்க குறிப்பிட்டுள்ளார்

Related Post