Breaking
Sun. Dec 7th, 2025

நீர்த்தேக்கத்தில் குதித்த மாணவனும் மாணவியும் மாயம் பாடப் புத்தகங்கள், சீருடைகளை வைத்துவிட்டு பாய்ந்ததாக தகவல்

கே. அசோக்குமார்

தெதுரு ஓயா நீர்த் தேக்கம் அருகே பாட புத்தகங்கள். பாடசாலை சீருடை என்ப வற்றை வைத்துவிட்டு ஒரு மாணவனும், மாணவியும் காணாமற்போயுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவர்கள் இருவரும் நீர்த் தேக்கத்தினுள் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.குருணாகல் காமினி வித்தியாலயத்தில் கல்வி பயிலும் 11 ஆம் ஆண்டு மாணவியும் குளியாப்பிட்டி கும்புக்கெட்டே மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவன் ஒருவருமே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.

நீர்த்தேக்கத்தின் அருகே இவர்களது பாடப் புத்தகமும் மற்றும் சீருடையை வைத்தே இவர்கள் யார் என்பது கண்டறியப் பட்டுள்ளது. பொலிஸாரின் உதவியுடனும் பிரதேசவாசிகளின் உதவியுடனும் தேடுதல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நேற்று பகல் 1.00 மணியளவிலேயே சீருடைகளும், புத்தக பைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

Related Post