மலேசியாவின் வெளிநாட்டு பணிப்பெண் முகவர்கள் சங்க தலைவர் அந்நாட்டு இணையமொன்றிற்கு வெளியிட்ட கருத்திலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கை மற்றும் கம்போடியா போன்ற நாடுகளிலிருந்து பணிப் பெண்களை அமர்த்துவது இலாபகரமானது எனவும், இதுவரைகாலமும் இந்தோனேஸிய பெண்களே அதிகளவில் மலேசியாவில் வீட்டுப் பணிப்பெண்களாக கடமையாற்றி வந்தனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் இந்தோனேஸிய பெண்களை பணியிலமர்த்துவது அதிக செலவு விரயமாகும் காரணத்தினாலேயே வேறு நாட்டு பெண்களை பணியிலமர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

