Breaking
Sun. Dec 7th, 2025

ஓற்றுமை,கல்வி,பிரதேச மக்களின் நலன் குறித்து அதிக கவனத்தை செலுத்துவது சாலச்சிறந்தது என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி முத்தலிபாவா பாருக் தெரிவித்தார்.
மன்னார் மாவட்டத்தில் அமைந்துள்ள அடம்பன் கட்டைக்காடு பரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட பள்ளிவாசல் திறப்பு விழாவில் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

சர்வதேச இஸ்லாமிய நிவாரண அமைப்பு குவைத் சர்வதேச இஸ்லாமிய நிதியத்தின் உதவியின் கீழ் இந்த பள்ளிவாசல் நிர்மாணிக்கப்பட்டன.

இங்கு மேலும் பாராளுமன்ற உறுப்பினர் முத்தலிபாவ பாருக் உரையாற்றுகையில்-
நபியுடைய காலத்தில் பள்ளிவாசல்கள் சகல நிருவாகத்துக்குமானதொன்றாக இருந்தது.இன்று பள்ளிக்குள் கதைத்தால் சத்தம் போட வேண்டாம் என்று கூறுகின்றனர்.பள்ளிவாசல்களை மையப்படுத்தி கல்வி,பண்புசார் விடயங்கள் இடம் பெற வேண்டும் என்பதையும் இங்கு கூறினார்.

அமைச்சர் றிசாத் பதியுதீன் இங்கு உரையாற்றுகையில் கூறியதாவது-

இந்த பிரதேசத்தின் நீண்ட நாள் தேவையாக இருந்தவந்த மஸ்ஜிதின் தேவை இன்று பூர்த்தியாகியுள்ளது.இந்த மஸ்ஜிதினை தொழுகையின் மூலம் உயிரோட்டம் உள்ளதாக மாற்றியமைக்க வேண்டும்.

இந்த பிரதேசத்தில் வாழும் தமிழ்,முஸ்லிம் மக்கள் புரிந்துணர்வுடன் வாழ வேண்டும்.யுத்தத்தால் சகல சமூகங்களும் பெறும் இழப்புக்களை சந்தித்துள்ளதை இங்கு நினைவுபடுத்துகின்றேன்.தற்போது மீள்குடியேற்றத்திற்குவரும் மக்களுக்கு இன்னும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை.தற்காலிக வீடுகளை நிர்மாணிக்க கூட சக்தியற்றவர்களாக இருக்கின்றனர்.

ஏனவே அதிகாரிகள் இம்மக்குளடன் இரக்கத் தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார்.

இந்த நிகழ்வில் மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன்,மாந்தை மேற்கு பிரதேச சபை உறுப்பினர்களான ஹஜ்ஜிக்,எம்.சனூஸ்,முசலி பிரதேச சபை தலைவர் எஹ்யான்,மன்னார் நகர சபை உறுப்பினர் நிலாமுதீன் நகுசீன்.மாந்தை மேற்கு பிரதேச சபை தலைவர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Related Post