அஸ்ரப் ஏ சமத்
சிலிங்கோ நிறுவனத்தின் முன்னாள் தலைவர் திரு லலித் கொத்தலாவல அவர்களுக்கு எதிரானவழக்கில் பிணையில் செல்ல அவர் அனுமதிக்கப்பட்டார். மேற்படி வழக்கு அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றில் அக்கரைப்பற்று மாவட்ட நீதிபதி முகம்மட் பஸீல் அவர்கள் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டபோதே இவ்வுத்தரவு வழங்கப்பட்டது.
அக்கரைப்பற்று பிரதேசத்திலுள்ள வடிக்கையாளர்கள் குறித்த சிலிங்கோபுரப்பட்டி செயாரிங் நிறுவனத்தில் வைப்பிலிடப்பட்ட பணம் மோசடியாக கையாளடப்பட்டதாகவும் குறித்த வாடிக்கையாளர்களின் முதலீட்டுப் பணத்தையோஅவர்களுக்கான இலாபத்தையோ இந்நிறுவனம் இதுவரை செலுத்தாமல் வாடிக்கையாளர்களை ஏமாற்றியதாக அந்நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்களுக்கெதிராக கல்முனை குற்றத்தடுப்பு மோசடிப் பிரிவு பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட இவ்வழக்கு பலவருடங்களாக அக்கரைப்பற்று நீதிமன்றில் நடைபெற்று வருகின்றது.
திரு. லலித் கொத்தலாவல தரப்பில் ஆஜரானசிரேஷ்ட சட்டத்தரணிகள் அவரதுஉடல் நிலமையையும் முதுமையையும் அன்னாரின் மனிதாபிமான சேவைகளையும்,உயர் நீதிமன்றினால் வழங்கப்பட்ட கட்டளைக்கமைவாக வரமுடியாமல் இருந்ததையும் ;கருத்திற் கொண்டு இவருக்கு பிணைவழங்கவேண்டுமென்று இவரது சார்பில் தோன்றிய சிரேஷ்ட சட்டத்தரணிகள் குழு செய்த விண்ணப்பத்தை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு அன்னாருக்கு பிணை வழங்கப்பட்டது.
இவ்வழக்கின் பிரதான சந்தேகநபராக கருதப்படும் சிலிங்கோ நிதிநிறுவனங்களின் முன்னாள் தலைவர் திருலலித் கொத்தலாவல அவர்களுக்கு பலதடவைகள் அழைப்புக்கட்டளை அனுப்பப்பட்டு சேர்க்கப்பட்டும் இந்நீதிமன்றில் சமூகமளிக்கத் தவறியமையால் அன்னாருக்குஎதிராகபிடியாணைபிறப்பிக்கப்படவேண்டுமெனமுறைப்பாட்டாளர்கள் சார்பில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர் மற்றும் ஏ.எச். சமீம் அவர்களின் விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி அவர்கள் குறித்தசந்தேகநபருக்கு எதிராகபிடியாணை
ஏற்கனவேபிறப்பிக்கப்பட்டிருந்தது. அதன்பேரில் இவர் இந்நீதிமன்றில் தனதுசட்டத்தரணிகள் குழு மூலம் ஆஜரானார்.
இவ்வழக்கில் இந்நிறுவனத்தின் ஏனைய பணிப்பாளர்கள் ஏற்கனவேநீதிமன்றில் தோன்றிஅவர்கள் பிணையில் செல்ல அனுமதிக்கப்ட்டிருந்தார்கள். இருப்பினும் குறிப்பிட்ட முக்கிய சந்தேகநபரானதிரு. லலித் கொத்தலாவலஅவர்கள் இதுவரை இந்நீதிமன்றில் ஆஜராகாமையினால் இவ்வழக்கு தொடர்ந்து பல வருடங்களாக பல தவணைகள் வழங்கப்பட்டுவந்தன. இறுதியில் இவ்வழக்கு மீண்டும் எதிர்வரும் ஜுன்மாதம் 05ம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

