கட்டாரில் மட்டக்களப்பு மற்றும் அம்பாறையை சேர்ந்த இருவர் மரணம்!

file image

கட்டாரில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற விபத்தில் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் இருவர் மரணமடைந்துள்ளனர்.

கோவில் போரதீவை சேர்ந்த ச.துவாரகன், பெரியநீலாவணையை சேர்ந்த ச.சுகந்தன் ஆகியோரே மரணமடைந்துள்ளனர்.

இவர்கள் இருவரும் பயணித்துக்கொண்டிருந்த காரும் லொறியொன்றும் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.