20 இலட்சம் ரூபா செலவில் ஹமீதியா பொது விளையாட்டு மைதானத்துக்கான பார்வையாளர் அரங்குக்கான அடிக்கல்நாட்டும் நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப் கலந்துகொண்டார்.
திருகோணமலை மாவட்டம் தம்பலகாம பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முள்ளிப்பொத்தானை ஹமீதியா விளையாட்டு மைதானத்தின் பார்வையாளர் அரங்குக்கான கட்டிட நிர்மாணத்திற்கான அடிக்கல் நடும் அங்குரார்ப்பண வைபவம் இடம் பெற்றது
