Home Blog Page 1141

சர்வதேச குர்ஆன் போட்டியில் வெற்றி பெற்ற இலங்கை மாணவனுக்கு அமைச்சர் றிசாத் பதியுதீன் பாராட்டு

0
சவூதி அரேபியாவில் இடம் பெற்ற சர்வதேச கிராத் போட்டியில் வெற்றியீட்டி இலங்கைக்கு பெருமையும்,முஸ்லிம் சமூகத்திற்கு கௌரவத்தையும் பெற்றுத் தந்த கொழும்பைச் சேர்ந்த அல்-ஹாபிஸ் முஹம்மத் றிஸ்தி முஹம்மத் றிஸ்கானுக்கு தமது வாழ்த்துக்களை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

ஈரான் இஸ்லாமிய குடியரசுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு அங்கு சென்றுள்ள அமைச்சர் றிசாத் பதியுதீன் முஹம்மத் றிஸ்கானுக்கு தமது வாழத்தினை தெரிவித்துள்ளதாக அமைச்சின் ஊடக பிரிவு வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளது.

சுமார் 80 க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் சர்வதேச மட்டத்திலிருந்து புனித மக்கா நகரில் நடை பெற்ற  கிறாஅத் போட்டியில் கலந்து கொண்ட போதும்,14 வயது நிரம்பிய எமது இலங்கை மாணவன் இ்ப்போட்டியில் முதலிடத்தை பெற்றது இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் ஒரு பதிவாகும்.
சிறுபான்மையாக இலங்கையில் முஸ்லிம்கள் வாழ்ந்த போதும் இஸ்லாமிய நெறிமுறைகளில் மிகவும் பற்றுதியுடன் இருப்பதாலும்,தமது நாட்டை நேசிப்பதாகவும்,இந்த மாணவனின் வெற்றி மூலம் சர்வதேச முஸ்லிம் நாடுகளுக்கு இலங்கை முஸ்லிம்கள் பற்றி பார்வையையும் ஏற்படுத்தியுள்தை நினைவுபடுத்தியுள்ள அமைச்சர் றிசாத் பதியுதீன்,இது போன்ற சகல துறைகளிலும் முஸ்லிம்கள் முன்மாதிரி மிக்கவர்களாக மிளிர வேண்டும் என்றும் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அடாவடித்தனத்தின் மூலம் எதையும் பெற முடியாது -அமைச்சர் ரிஷாத் பதியுதீன் காட்டம்

0
வன்னி மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள் மக்களின் விருப்பத்தின் படியே தெரிவு செய்யப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ள வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் அவர்களை புரந்தள்ளி எந்த தீர்மானங்களையும் எடுக்க முடியாது என்றும் கூறினார்.
வன்னி வசந்தம் என்னும் தொனிப் பொருளில் வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று(2012.12.16) இடம் பெற்ற அபிவிருத்தி தொடர்பான கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும் போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.

 

வவுனியா அரசாங்க அதிபர் பந்துல ஹரிச்சந்திர, பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கல நாதன்,சிவசக்தி ஆனந்தன் உட்பட மாகாண அமைச்சின் செயலாளர்கள்,திணைக்களங்களின் தலைவர்கள்,மக்கள் பிரதி நிதிகள் ஆகியோர் இதன் போது சமூகமளித்திருந்தனர்.
வவுனியா மாவட்டத்தில் சகல பிரதேசங்களும், எவ்வித பாகுபாடுகளுமின்றி அபிவிருத்தி செய்யப்படுகின்றன.இதில் இனம்.மதம்,பார்ப்பதில்லை,எங்கு தேவை இருக்கின்றதோ அங்கு முன்னுரிமைபடுத்தி அபிவிருத்திகளை செய்கின்றோம்.
பிரதேசத்தில் அபிவிருத்திகளை செய்கின்ற போது ,மக்களின் தேவைக்கு முன்னுரிமையளித்து சகல மக்கள் பிரதி நிதிகளின் கருத்துக்களையும் உள்வாங்கி திட்டங்களை தயாரிக்க வேணடும்.இந்த மாவட்டம் இன்று அமைதியாக காணப்படுகின்றது.ஆனால் சிலருக்கு தேவைாயகவுள்ளது, மீண்டும் பயங்கரவாதத்தை தோற்றுவிக்க,அதற்கு இடம் கொடுக்கமுடியாது.
இந்த நாட்டின் ஜனாதிபதி தான் வன்னி மாவட்டத்துக்கான நிதிகளை நாம்கேட்கின்ற போதெல்லாம் ஒதுக்கித்தருகின்றார் என்பதை இங்குள்ளவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இம்மாவட்டத்தின் மின்சாரம்,சுகாதாரம்,பாதை,கல்வி,மக்களின் வாழ்வாதார திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு நாம் நிதிகளை வழங்கி மாவட்டத்தை முன்னேற்றகரமான பாதைக்கு இட்டுச் செல்கின்றோம்.எனவே சகலரும் மக்களுக்கான இந்த அபிவிருத்திகளை முன்னெடுக்க உதவிகளை வழங்குங்கள் என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் இங்கு கூறினார்.
வவுனியா மாவட்ட பாடசாலைகளில் காணப்படும் ஆங்கில ஆசிரியர்களின் பற்றாக்குறையினை நிவர்த்திக் உரிய நடவடிக்கையினை எடுக்குமாறு கல்வி அமைச்சின் செயலாளருக்கு இங்கு அமைச்சர் பணிப்புரை வழங்கினார்.

மனித உரிமை அமைப்பின் 4வது ஆண்டு விழா கொழும்பில் இடம் பெற்றுள்ளது

0
மனித உரிமை அமைப்பின் 4 வது ஆண்டு நிறைவு விழா கொழும்பு இலங்கை மன்றக் கல்லுாரியின் கேட்போர் கூடத்தில் இன்று இடம் பெற்றுள்ளது.
அமைப்பின் பிரதம நிறைவேற்று பணிப்பாளர் கலாநிதி எம்.என்.எம்.அஸீம் தலைமையில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹூனைஸ் பாருக்,அதன் அங்கத்துவத்துவ அடையாள அட்டையினை பெற்றுக் கொண்டுள்ளார்.அதேவேளை பிரதமரின் இணைப்புச் செயலாளர் எஸ்.டி.தர்மசேன பாடசாலை மாணவர்களுக்கு பாடப் புத்தகங்களை இதன் போது வழங்கினார்.

இஸ்ரேலின் மிலேச்சத்தனமான தாக்குதலுக்குஅமைச்சர் ரிஷாத் பதியுதீன் கண்டனம்

0
இன்று சர்வதேச முஸ்லிம் சமூகம் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அடக்கு முறை மற்றும் மனித உணர்வுகளுக்கு அப்பாலான தாக்குதல் சம்பவங்களை தாம் வண்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ள கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சரும்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான றிசாத் பதியுதீன்,இஸ்ரேல் காஸா மீது மேற்கொண்டுவரும் தாக்குதல்களை நிறுத்த சர்வதேச வல்லரசு நாடுகள் முன்வர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

பாலஸ்தீன புனித பூமியை இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள நிலையில்,அப்பாவி மக்களையும்,குழந்தைகளையும் இலக்கு வைத்து மேற்கொண்டுவரும் தாக்குதல்கள் அப்பட்டமான சர்வதேச மனித உரிமை மீறல்களாகும்.இதனை தட்டிக் கேட்பதற்கு ஜெனீவா மனித உரிமை ஆணையகம் எடுக்கும் நடவடிக்கைகள் என்ன வென்று அமைச்சர் றிசாத் பதியுதீன் கேள்வியெழுப்பியுள்ளார்.

சற்று முன்னர் வரை காஸா பள்ளத்தாக்கு மீதும்,பலஸ்தீன குடிமக்கள் வசிக்கும் பிரதேசங்கள் மீதும் இஸ்ரேலிய படையினர் மேற்கொண்டுள்ள தாக்குதல்களினால் 125க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.தாங்கள் வாழ்ந்த பூமியினை அபகரித்துக் கொண்டும்,அங்குள்ள முஸ்லிம்களை கொத்தடிமைகளாக நடாத்தும் இஸ்ரேலின் மோசமான நிலையினை முடிவுக்கு கொண்டு வந்து பலஸ்தீன மக்கள் நிம்மதியாக வாழும் நிலையினை தோற்றுவிக்க அரபுலகம் முன்னெடுக்கும் நடவடிக்கை வெற்றியளிக்க இலங்கை முஸ்லிம்கள் பிரார்த்திக்க வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுள்ளார்.
இஸ்லாமியர்கள் ஆகிய நாம் ஆயுத கலாசாரத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் அல்ல என்பதினாலும்,துஆ பிரார்த்தனை மூலமே எதிரிகளின் சதிகளை அல்லாஹ்வின் உதவியால்ம முறியடிக்க முடியும் என்பதால்,அதில் ஈடுபடுவதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
பலஸ்தீனத்தில் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு தமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துள்ள அமைச்சர் றிசாத் பதியுதீன் தாக்குதலில் ஷஹீதான சுஹதாக்களுக்காக பிரார்த்திப்பதாகவும்,சகலரையும் பிரார்த்திக்குமாறும் கேட்டுள்ளார்.
அதே வேளை இஸ்ரேலின் இந்த மிலேச்சத்தனமான தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும்,இந்த பணியினை சர்வதேச பலம் பொருந்திய நாடுகள் செய்ய வேண்டும் என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய உயர் ஸ்தானிகர் அமைச்சர் றிசாத் பதியுதீன் சந்திப்பு

0

இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் ஜோன் ரண்கின்,அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீனை அமைச்சில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.தற்போது வடக்கு,கிழக்கு சமாதான சூழல் குறித்து அமைச்சர றிசாத் பதியுதீன் உயர் ஸ்தானிகரிடம் எடுத்துரைத்ததுடன்,பிரித்தானிய முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்ய வாய்ப்புக்கள் ஒள்ளது என்றும் எடுத்துரைத்துள்ளார்.

தாம் புதிய உயர் ஸ்தானிகராக பதவியேற்றதன் பின்னர் முதலாவது தங்களை சந்தித்துள்ளதாகவும்,எதிர் காலத்திலும் இரு நாடுகளுக்குமான் வர்த்தக உறவுகள் குறித்து தொடர் பேச்சுக்களை நடத்தவுள்ளதாகவும் உயர் ஸ்தானிகர் தெரிவித்ததுடன்,தாம் வடக்கிற்கு உத்தியுாகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும் உயர் ஸ்தானிகர் அமைச்சரிடத்தில் எடுத்துரைத்தமை குறிப்பிடத்தக்கது.

மனித உரிமை அமைப்பின் ஆலோசகராக ஹூனைஸ் நியமனம்

0

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், சட்டத்தரணியுமான ஹூனைஸ் பாருக்,மனித உரிமை அமைப்பின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த ஆலோசனைக் குழுவின் ஏனைய ஆலோஷகர்களாக பிரதமர் தி.மு.ஜயரத்ன. பாதுகாப்பு செயலாளரின் இணைப்பு செயலாளர் லெஸ்லி குணவர்தன ஆகியோர் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளனர்.

 பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக்குக்கான நியமனக் கடிதத்தை மனித உரிமை அமைப்பின் பிரதான நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் கலாநிதி எம்.என்.எம்.அஸீம் வழங்கி வைத்தார்.
மன்னார் மாவட்டத்தின் முசலி பிரதேச செயலகப் பிரிவில் தம்பட்டை முதலியார் கட்டு கிராமத்தை பிறப்பிடமாக கொண்ட பாராளுமன் உறுப்பினர் தமது ஆரம்ப பல்வியினை சிலவத்துறை பாடசாலையிலும்,அதன் பின்னர் புத்தளம் சாஹிரா தேசிய கல்லுாரியிலும் மேற்கொண்டார்.
சிறிது காலம் நுரைச்சோலை,மற்றும் ஆலங்குடா பாடசாலைகளில் ஆசிரியராக பணியாற்றிய இவர்,பின்னர் முஸ்லிம் சமய கலாகார திணைக்களத்தின் வக்பு சபையில் பணியாற்றினார்.வடமாகாண மக்களின் நல்வாழ்வுக்கும்,இலங்கை முஸ்லிம்களின் குரலாகவும் பாராளுமன்றத்திலும்,வெளியிலும் தமது பணியினை செய்துவரும் இவர் ஒரு சட்டத்தரணியுமாவார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே வேளை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய இணைப்பாளராகவும் கட்சியின் தலைவர் அமைச்சர் றிசாத் பதியுதீனினால் நியமிக்கப்பட்டுளளார்.

அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் பணியினை சகலரும் ஏற்றுக் கொண்டுள்ளனர்-உலமா சபை

580
வவுனியா  மாவட்ட ஜமிய்யத்துல் உலமா சபையின் ஏற்பாட்டில் வவுனியா மாவட்ட பள்ளிவாசல்களின் நிர்வாக சபையினர்களுக்கான கூட்டமொன்று இன்று வவுனியா இஸ்லாமிய கலாச்சார அபிவிருத்தி சபை கேட்பேர் கூடத்தில் இடம்பெற்றது.

இதில் எடுக்கப்பட்ட தீரடமானங்களை வ்வுனியா மாவட்ட ஜமிய்யத்துல் உலமா சபையின் தலைவர் மற்றும செயலளார் ஆகியோர் கையெழுத்திட்டு ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.அவ்வறிக்கையின் விபரங்கள் வருமாறு –

 ( 1 ) வவுனியா மாவட்டத்தில் தமிழ் முஸ்லிம் சிங்களம் என மூவின மக்களும் புரிந்துணர்வுடனும்,ஒற்றுமையுடனும் வாழ்ந்து வரும் இத்தருனத்தில் அதை சீர்குலைக்க  சுயநலம் போக்கு கொண்ட சில அரசியல்வாதிகள் ஈடுபடுவதை வண்மையாக கண்டிக்கின்றோம்.
 ( 2 ) முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு முறைமுகமாக தடைகளை ஏற்படுத்தி அவர்களை  பிழையானவர்களாக ஊடகங்களில்  சித்தரித்துக்காட்டும்,சில தமிழ் அரசியல்வதிகளின் போக்கு உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும்.
 ( 3 ) வன்னி  மக்களின் விடிவுக்காகவும்,அவர்களின் சௌபாக்கிய வாழ்வுக்காகவும் நீதியுடனும்,நேர்மையுடனும் இனம் மதம் பாராமல் உழைத்து வரும்,தன்னலம் பாராத சமூக சேவையாளனாகவே அமைச்சர் கௌரவ அல்-ஹாஜ் றிசாத் பதியுதீன் அவர்களை மூவின மக்களும்,பார்க்கின்றனர்.இந்த நிலையில அமைச்சர மீது அவதுறுகளை அள்ளிவீசி, இனமுரண்பாடுகளை தோற்றுவித்து அரசியல் லாபம் தேட முற்படும்,சில தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடுகளையும்,அவர்கள் விடும் பிழையான அறிக்கைகளையும்,வண்மையாக கண்டிக்கின்றோம்.
 ( 4 ) வன்னி மாவட்ட மூவின மக்களும்,யுத்த்த்தால் கடுமையாக பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்து பேர் இழப்புக்களைச் சந்தித்துள்ளனர்.தற்போது மீள்குடியேற்றம் நடைபெறும் இவ்வேளையில் மீள்குடியேறும் இம்மக்களை இன மத வேறுபாடு இன்றி,மனிதாபிமான முறையில்  ஏற்றுக் கொள்ளுமாறும்,இதற்கு முட்டுக்கட்டையாக இருப்போரிடம்,அன்பாக வேண்டுகோள்விடுக்கின்றோம்.
 ( 5 ) அரசியல் வாதிகளோ அல்லது சமூகத்தில் மதிப்பு மிக்கவர்களோ மீள்குடியேற்றம் மற்றும்,காணி போன்ற விடயங்களில் தமக்குள் காணப்படுகின்ற பிரச்சினைகளுக்காக ஊடகங்கள் வாயிலாக சமயங்களை குறை கூறுவதையும்,பிழையாக விமர்சிப்பதையும் முற்றாக நிறுத்த வேண்டும்.என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்ப்பட்டுள்ளது.