Breaking
Fri. Apr 26th, 2024
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அன்னச் சின்னத்திற்கு வாக்களித்து சஜீத் பிரேமதாசவை ஜனாதிபதியாக்குவோம் இதனால் தான் சிறுபான்மை சமூகத்தை பாதுகாக்க முடியும் என பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் தெரிவித்தார்.
காத்தான்குடியில் நேற்று (19) இடம் பெற்ற ஐக்கிய தேசிய முன்னனியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜீத் பிரேமதாசவை ஆதரித்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஆதரவு பொதுக் கூட்டத்தில்” ஒன்றாய் முன்னோக்கி” எனும் தொனிப்பொருளில் இடம் பெற்ற கூட்டத்தின் போதே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் உரையாற்றுகையில்  18 ஆவது திருத்தச் சட்ட மூலம் சிறுபான்மை சமூகத்தின் உரிமைகளை அன்றைய ஜனாதிபதியாக இருந்து சர்வாதிகாரப் போக்கைக் கொண்ட மஹிந்த ராஜபக்ஸ யாப்பில் இருந்து நீக்கினார் இதனால் முஸ்லிம் சமூகம் ஜனாதிபதி தேர்தலில் தோற்கடித்து மைத்திரியை ஜனாதிபதியாக்கினோம் இது போல் யுத்தத்தை வெற்றி கொண்டதாகவும் கூறிய மஹிந்த 62 வீதமான வாக்குகளை பெற்று வெற்றியடைந்தும் எமது சமூகத்தின் உரிமைகளை பாதுகாக்க தவறியமையால் மீண்டும் தோல்வியுற்றார் இது போலவே இந்த மண்ணில் ஒருவர் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுகிறார் அவர் ஜனாதிபதியாக வர முடியாது இவர் உடனடியாக வாபஸ் பெற வேண்டும் இது காத்தான்குடி மண்ணுக்கு செய்யும் துரோகமாகும் இதனால் முஸ்லிம்களின் வாக்குகள் சிதறடிக்கப்படுகிறது. 1982 ம் ஆண்டு ஜே.ஆர் ஜெயவர்தன ஜனாதிபதி தேர்தலில் 52 வீதமான வாக்குகளை பெற்றார்.இது போல் ஆர்.பிரேமதாச 50.4 வீதமான வாக்குகளைப் பெற்றார். சந்திரிகா அம்மையார் 62.3 வீதமான வாக்குகளை பெற்றார்கள்இந்த நிலையில்தான் நாட்டின் முன்னைய தேர்தல்களின் புள்ளி விபரங்கள் கூறுகின்றன .எப்படி இருந்தாலும் சிறுபான்மையினரை நசுக்க முற்படுவதால் வாக்குகளை பெற முடியாது இன்று மஹிந்தவின் தரப்பில் கோத்தாபாய ராஜபக்ஸ மூலமான ஏர்ஜன்டுகளாக இனவாதிகளாக உதயகம்மன்பில ,விமல்வீர , அதுரலிய ரதன தேரர் உள்ளிட்டவர்கள் கோத்தா பக்கமே உள்ளார்கள் இவர்கள் இனவாதிகளாக இருந்து முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற முடியாது. வடகிழக்கில் உள்ள சிறுபான்மையினர் நன்றாக புரிந்து கொண்டுள்ளார்கள் அன்னத்திற்கு வாக்களிப்போம் சஜீத் என்கின்ற தலைவனை நாட்டின் தலைமகனாக அழகுபார்ப்போம் என்றார்.

Related Post