
Main News




கம்பரெலிய திட்டம் மூலமாக கற்குழி மைதான புனரமைப்புக்கு 20 இலட்சம் நிதி ஒதுக்கீடு , பள்ளிவாயல்களுக்கும் தலா ஐந்து இலட்சம்
திருகோணமலை மாவட்டம் கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மதஸ்தளங்கள்,மைதானம் புனரமைப்புக்கு கம்பரெலிய வேலைத் திட்டத்தின் கீழ் நிதி உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. குறித்த நிதி உதவியினை இன்று வியாழக் கிழமை (11) திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் அவர்களின் பிரத்தியேகச் செயலாளருமான டாக்டர் ஹில்மி முகைதீன் பாவா வழங்கி வைத்தார். பிரதி அமைச்சரின் கம்பரெலிய திட்டத்தின் கீழ் குறித்த நிதி உதவிகள் வழங்கப்பட்டன…

குருநாகல் முஸ்லிம் மையவாடியை மாநகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் சுவீகரிக்கும் முயற்சிக்கு மக்கள் காங்கிரஸ் கடும் எதிர்ப்பு.
குருநாகல் பஸாரில் அமைந்துள்ள ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ பள்ளிக்கு சொந்தமான மையவாடிக்காணியை குருநாகல் மாநகர சபை சுவீகரிக்க மேற்கொண்டுவரும் முயற்சிக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. மாநகர சபையின் ஆளும் கட்சியான பொது ஜன பெரமுனவும் எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்தே இந்த தீர்மானத்தை மாநகர சபையில் கொண்டுவந்த போது, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மாநகர சபை உறுப்பினர் மொயினுதீன் அசார்டீன் கடுமையாக எதிர்த்ததுடன் இந்த முயற்சியை கைவிடுமாறும்…

ஒலுவில் துறை முக வளாகத்தினுள் உள்ள மண்களை அகழ்ந்து விற்பனை செய்ய அதிரடி தடை உத்தரவு
ஒலுவில் துறை முக வளாகத்தினுள் குவிக்கப்பட்டிருக்கும் மண்களை அகழ்ந்து விற்பனை செய்வதற்கு அதிரடி தடையினை துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் விதித்துள்ளார். கொழும்பு துறை முக அதிகார சபையின் முகாமைத்துவ பணிப்பாளர் கட்டிடத்தில் இன்று (10) புதன் கிழமை துறை முக அதிகார சபை உயரதிகளுடன் இடம் பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இத் தீர்மானத்தை பிரதி அமைச்சர் உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார். துறை முக அதிகார சபையினால்…

மாவடிப்பள்ளி அஸ்ரப் மகா வித்தியாலயத்திற்கு கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளர் உதவி!
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளரும் சிரேஸ்ட ஊடகவியலாளரும் சட்டத்தரணியுமான முஷர்ரப் முதுநபீன் கடந்த 2019.03.23 ம் திகதி மாவடிப்பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்ட இளைஞர் ஒன்று கூடலில் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்ததுடன், மாவடிப்பள்ளி கமு/ அல் – அஸ்ரப் மகா வித்தியாலயத்திற்கும் திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டு பாடசாலை அபிவிருத்திகள், பாடசாலையில் நிலவும் குறைபாடுகள், தேவைகள் சம்மந்தமாகவும் அதிபருடன் ஆலோசனை செய்தார். இதன் போது பாடசாலை அதிபர் எம்.ஐ.எம். சைபுடீன் பாடசாலையின்…

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக அமைச்சர் றிஷாட் பதியுதீன்
வடமாகாணத்தில் இருந்து இடம்பெயர்ந்தோர்களுக்காக புத்தளம் மாவட்டத்தில் இயங்கும் முன்பள்ளிகளில் கடமை புரியும் ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் (07) கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் மீள்குடியேற்ற செயலணி திட்டப் பணிப்பாளர் யாசீன், மன்னார் பிரதேச சபை தவிசாளர் முஜாஹிர், கட்சியின் புத்தளம் மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி, பிரதேச சபை உறுப்பினர்கள் நௌபீல் , ஆதீர், சபீல், ரிபாஸ் நசீர் உட்பட பலர்…

மக்கள் காங்கிரசின் கிழக்குமாகாண இளைஞர் அமைப்பாளர் முசர்ரப் தலைமையில் பொத்துவில் கிளையின் விசேட கூட்டம்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், பொத்துவில் கிளையின் விஷேட கூட்டம் 2019-04-07 அன்று மாலை, அதன் கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளர், சட்டத்தரணி முசர்ரப் அவர்களின் தலைமையில் அவரின் இல்லத்தில் இடம் பெற்றது. நள்ளிரவு வரை தொடர்ந்த கூட்டத்தில், அ.இ.ம.கா பிரமுகர்கள், அரசியல் ஆர்வலர்கள், புத்திஜீவிகள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், கட்சி ஆதரவாளர்கள், பொதுமக்கள், வர்த்தகர்கள் என ஏராளமானோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டிருந்தனர். கூட்டத்தில் கட்சியினால் முன்னெடுக்கப்படுகின்ற, முன்னெடுக்கப்பட இருக்கின்ற அபிவிருத்தித் திட்டங்கள் பற்றியும் எதிர்வரும் தேர்தல்களை…

அப்துல்லாஹ் மஹ்ரூப் முயற்சியினால் ஒலுவில் மீனவர்களின் நலன் கருதி புதிய திட்டம்!!!
ஒலுவில் துறை முகத்துக்கு விஜயம் செய்த பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் அவர்கள் மீனவர்களுக்கு தடையாகவுள்ள இடத்தை அகழியாக வெட்டுவதற்கு உரியவர்களுக்கு உடனடியாக பணிப்புரை வழங்கினார். குறித்த நிகழ்வு (07) சனிக் கிழமை இடம் பெற்றதுடன் இலங்கை துறை முக அதிகார சபையின் முகாமைத்துவப் பணிப்பாளர் அதுலஹேவவிதாரண உள்ளிட்ட முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டார்கள். மீன்பிடியாளர்களுக்கு தங்களது படகுகளை கொண்டு செல்வதில் பல்வேறு தடைகளும் கஷ்டங்களும் ஏற்பட்டது மீனவர்களின் கோரிக்கையை ஏற்ற துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை…

அரச சொத்துக்களை மோசடி செய்வதற்கு ஒரு போதும் துனை போகமாட்டேன்!!!
அரச சொத்துக்களை மோசடி செய்வதற்கு ஒரு போதும் துனை போகமாட்டேன் அதிகாரத்தில் இருக்கும் வரையான காலப் பகுயியில் மோசடிகளுக்கு இடம் கொடுக்க முடியாது கிண்ணியா உப்பாறு பகுதியில் உள்ள காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்கு சொந்தமான காணிகள் தனியாருக்கு விற்பனை செய்யப்பட்டு பிழையாக வர்த்தமாணி அறிவித்தலும் செய்யப்பட்டுள்ளதாக துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்தார். கிண்ணியா அல் அதான் மஹாவித்தியாலயத்தில் நேற்று (08) திங்கட் கிழமை பொது மக்களுக்கான காணி உறுதிப்…

புல்மோட்டை கனிய மணல் கூட்டுத்தாபனம் வெளிநாடுகளுக்கு விற்கப்படாது; போலிப்பிரசாரங்களில் இதுவும் ஒன்றென அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு!
புல்மோட்டை கனிய மணல் கூட்டுத்தாபனத்தை ஒரு போதும் தனியாருக்கோ வெளிநாடுகளுக்கோ விற்பனை செய்ய மாட்டோம் எனவும் தன்னைப்பற்றி தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் போலிப் பிரசாரங்களில் இதுவும் ஒன்றெனவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். புல்மோட்டை கனிய மணல் கூட்டுத்தாபனத்தின் ஊழியர்களுக்கான “பங்கிலாப பகிர்வு” இன்று (08) காலை கனிய மணல் கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்ற போது, பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் இந்த விடயத்தை மீள உறுதிப்படுத்தினார். “நாங்கள்…