Breaking
Fri. Apr 26th, 2024

நமது மாணவர்கள் அரச பல்கலைக்கழகங்களில் பட்டங்களை பெற்று தொழிலின்றி வீடுகளியே முடங்கி கிடக்கும் நிலைக்கு மாற்றமாக தனியார் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றவர்கள் வெளிநாடுகளிலும் உள்நாட்டிலும் சிறப்பான தொழில் மேற்கொண்டு வருவது தனியார் பல்கலைக்கழகங்களின் தேவையையும் சிறப்பையும் உணர்த்தி நிற்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் பிரதி அமைச்சருமான அப்துல்லாஹ் மஃரூப் தெரிவித்தார்

கொழும்பு தெகிவளையை தளமாக கொண்டு இயங்கி வரும் சுகாதார, விஞ்ஞான மருத்துவ மற்றும் ஐவா (CHSMC & IWA Campus) பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் (16 ) பிரதம விருந்தினராக அவர் கலந்துகொண்டு உரையாற்றினார்

அவர் மேலும் கூறியதாவது, மாணவர்கள் கற்றுவிட்டு வீடுகளில் உறங்கிக்கிடப்பது பாரிய
மன அழுத்தங்களை அவர்களுக்கு ஏற்படுத்தும். இந்த நிலையை தனியார் பல்கலைக்கழகங்கள் ஓரளவு நிவர்த்திக்கின்றன. சித்த ஆயுர்வேதம் மற்றும் இன்னொரன்ன துறைகளில் பட்டம் பெற்றவர்களுக்கு மத்திய கிழக்கு நாடுகளில் நல்ல தொழில் வாய்ப்பும் கிராக்கியும் ஏற்படுகின்றது. அந்த வகையில் IWA Campus நிறுவனம் தனது பணியை சிறப்பாக செய்து வருவதாகவே உணர்கிறேன் . இந்த பல்கலைக்கழகத்தின் நிறுவுனர்களான டாக்டர் முனாஸிக், டாக்டர் ஹஸ்மியா உதுமாலெப்பை ஆகியோரின் கல்விப் பணிகளையும் பாராட்டாமல் இருக்க முடியாது. ஒரு நாட்டின் வருமானத்தில் 06 சத வீதத்தையாவது கல்விக்கான நிதியாக ஒதுக்க வேண்டும் என்பதே சர்வதேச நியமாகும் . அந்த விதிமுறையை நமது இலங்கை பின்பற்றுகின்றதா? என்பது கேள்விக்குறியே பல்கலைக்கழகத்துக்கான நுழைவுத் தேர்வில் சித்தியடையும் குறிப்பிட்ட சிறு தொகையினரை விட எஞ்சியோர் தொழில் இன்றி அலையும் நிலை மாறவேண்டும். தனியார் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்று தேர்ச்சி பெற்றவர்கள் தற்போது நாட்டின் தேவைகளையும் கல்விச்சமூகத்தின் எதிர்பார்ப்பையும் அண்மைக்காலமாக நிறைவேற்றி வருவது கண்கூடு. அது மாத்திரமன்றி நாட்டின் பொருளாதாரத்தில் அவர்கள் பங்காளர்களாக ஆகியுள்ளதுடன் அந்நிய செலாவணியை கொண்டுவருவதிலும் முக்கியமானவர்களாக மாறி வருவது பெரு மகிழ்ச்சி தருகின்றது என்றார். டாக்டர் முஹம்மட் முனாசிக் தலைமையில் இடம்பெற்ற இந்த பட்டமளிப்பு விழாவில் அதிதிகளாக சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர் பௌசி , பேராசிரியர் எம்
எஸ் எம் ஜலால்தீன் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜமீல் , முன்னாள் நீதிபதி கலாநிதி அப்துல் கபூர், மாலைதீவு பேராசிரியர் முஸ்தாக், பணிப்பாளர் நஜிமுதீன் செய்னுலாப்தீன்  உட்பட கல்விமான்கள் பலர் பங்கேற்றனர்
பல்கலைக்கழகத்தின் பொதுப்பதிவாளர் டாக்டர் ஹஸ்மியா உதுமாலெப்பை வரவேற்புரையை நிகழ்த்தினார்

Related Post