Breaking
Fri. Apr 26th, 2024

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பொலிஸ் பிரிவில் கதிரவெளி இராணுவ முகாமுக்கு முன்னாள் உள்ள காட்டுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் ரீ – 81 ரக மோட்டார் குண்டு ஒன்றும் கைக் குண்டு ஒன்றும் நேற்று (20) பிற்பகல் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.

இராணுவத்தினருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து குறித்த பிரதேசத்தில் இருந்து ரீ – 81 ரக மோட்டார் குண்டு ஒன்றும் கைக் குண்டு ஒன்றும் வாகரை பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவூம் கைக்குண்டில் எல்.ரீ.ரீ.ஈ. என எழுத்துள்ளதாகவூம் வாகரை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதனை செயலிழக்கச் செய்வதற்காக இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவூம் வாகரை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *