Breaking
Fri. Apr 26th, 2024

காணாமற்போனோர் தொடர்பில் அரசாங்கம் இந்த வரவு செலவு திட்டம் மூலம் மேற்கொண்டுள்ள தீர்மானம் துயரத்தில் உள்ள அந்த மக்களுக்கு நம்பிக்கையூட்டும் செயலாகும் என இராஜாங்க அமைச்சர் அமீர் அலி பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அவர்களது பிரச்சினைக்குத் தீர்வுகாணும் வரை 6000 ரூபா கொடுப்பனவொன்றை வழங்க அரசு முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது. எனினும் இதனை ஆரம்பமாக வைத்து அத்தொகையை மேலும் அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

அதேவேளை, வீதிகளிலும் வெய்யிலிலும் போராட்டம் நடத்தும் அம்மக்களின் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் விரைவில் தீர்வுபெற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

அரசாங்கம் இம்முறை வரவு செலவுத்திட்டத்தில் அரசாங்க ஊழியர்களுக்கு 2500 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்கியுள்ளது. 2015 ஆம் ஆண்டு முதல் 2015 வரையான சம்பள அதிகரிப்பானது 106 வீதமான அதிகரிப்பாகும். இதனை நாம் வரவேற்கின்றோம்.

புத்தளம் அறுவைக்காடு குப்பை விவகாரம் தொடர்பில் நாம் எமது முழுமையான எதிர்ப்பைத் தெரிவிக்கின்றோம். மனிதாபிமான ரீதியில் சிந்தித்து இதனை உடனடியாக நிறுத்தவதற்கு உரிய அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related Post