Breaking
Sat. Apr 27th, 2024

இன்றைய காலத்தில் பேசுபொருளாக மாறிவருகிறது தோப்பூர் பிரதேச செயலகத்துக்கான தனியான செயலகம் இதனை தடுப்பதற்கும் மூக்கை நுழைத்து செயற்படுவது அநியாயமாகும் இதற்கான தடைகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்  இரா.சம்மந்தன் அவர்களே மேற்கொண்டு வருகிறார் என துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதி அமைச்சரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்தார்.

தோப்பூரில் இன்று (20) இடம் பெற்ற பள்ளிவாயல் நிருவாகிகளுடனான விசேட சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்

2004 ம் ஆண்டு காலப் பகுதியில் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள மூன்று பிரதேச செயலகங்களின் தேவை உணரப்பட்டு பிரதமரிடம் உத்தியோகபூர்வமான ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டது .குறிஞ்சாக்கேணி, புல்மோட்டை, தோப்பூர் ஆகியவற்றுக்கான செயலகங்கள் உருவாக்குவது தொடர்பாகவே சட்டரீதியான ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது.

தோப்பூருக்கான உப பிரதேச செயலகம் 2007 ம் ஆண்டில் தற்காலிகமாக அமைக்கப்பட்டது இதனை தொடர்ந்து மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தின் போதும் அமைச்சர் வஜிர அபேவர்தனவை மேல்கோல்காட்டி கடும் வாக்குவாதத்தில் சம்மந்தன் தோப்பூர் பிரதேச செயலகத்தை தடை செய்யக்கோரிய பிரேரனையை முன்வைத்து வாக்குவாதத்தில்  என்னுடன் ஈடுபட்டார் இவ்வாறான சிறுபான்மை சமூகத்துக்கு தடைகளை ஏற்படுத்துவது மனவேதனையளிக்கிறது.

இன,மத பேதமற்ற முறையில் தோப்பூர் பிரதேச செயலகம் உருவாக்கப்பட வேண்டும் இதனால் குறித்த தமிழ் சிங்கள முஸ்லீம் மக்கள் அதற்குள் அங்கம் வகிப்பர் இதற்காக கட்சி பேதமற்ற முறையில் எதிர் வரும் வாரங்களில் அமைச்சர் வஜிர அபேவர்தன உள்ளிட்ட பிரதமரையும் சந்திக்கவுள்ளோம் இச் சந்திப்பில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ்.தௌபீக், இம்ரான் மஹ்ரூப் தோப்பூர் பள்ளி நிருவாகம் உலமா சபையினரும் வருகை தரவுள்ளார்கள்.

கட்டைபறிச்சான் சம்பூர் போன்றவற்றைக் கொண்டு பிரதேச சபையும் மூதூர் பிரதேச சபை நகர சபையாக தரமுயர்த்தப்பட வேண்டும் போன்ற எழுத்துருவிலான முக்கிய ஆவணங்களை அன்றைய தினமே பூரணமாக உள்வாங்கப்பட்டது.

கிளிவெட்டி சேருவில பிரதேச சபையில் தனி பிரதேசமாக காணப்படுகிறது மக்களுடைய கோரிக்கை நியாயமானது அமைதியான முறையில் தோப்பூருக்கான தனி பிரதேச செயலகம் உருவாக்கப்பட வேண்டும் சட்டரீதியான எழுத்துருவிலான ஆவணங்களை உத்தியோகபூர்வாமாக்க ஒன்றுபடவேண்டும் என்றார்.

Related Post